பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 39 எளிதாக முடிக்க இயலும். ஆதலால் அதற்கான பணியில் ஈடுபடுக...' என்ற சொற்கள் முடிவடையும் பொழுது நபி பெருமானின் அந்த இனிய உருவம் இபுராகிமின் அகக்காட்சியில் இருந்து மெதுவாக மங்கி மறைந்துவிட்டது. சுல்த்தான் செய்யது இபுராகிம் தமது பாட்டனாரை அகக்காட்சியில் கண்டு அவர்களது இனிய உபதேசத்தைக் கேட்டதை இனிய நினைவுகளில் நீண்ட நேரம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது காலைத் தொழுகைக்கான பாங்கு சத்தம், அதனையடுத்த தொழுகைக்காக அந்தப் பள்ளிக்கு வருகின்ற முஸ்லீம் மக்களின் மென்மையான ஆரவாரம் முதலியவை இபுராகிமின் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தன. உலகில் கிடைக்காத ஒரு அதிசயப் பொருளைப் பெற்றது போன்ற உள்ளக் களிப்புடன் அவர் காலைத் தொழுகைக்கு எழுந்து சென்றார். காலைத் தொழுகை முடிந்தவுடன் அதில் கலந்து கொண்ட வர்கள் சிறிது நேரம் அமர்ந்து பள்ளிவாசல் மெளலவியின் உபதேசங் களைக் கேட்டுச் செல்வது அந்த மக்களின் அன்றாட வழக்கமாக இருந்தது. அந்தச் சமயத்தில் எழுந்து நின்ற இபுராகிம் அங்கு குழுமி யிருந்த மக்களுக்குத் தனது சலாத்தை தெரிவித்தார். அன்று வைகறைப் பொழுதில் அவர் பாட்டனாரின் திருவுருவக் காட்சியையும் அவர் தமக்கு வழங்கிய உபதேச மொழிகளையும் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். செவிமடுத்த மக்கள் மகிழ்ச்சியில் சிறிது நேரம் திளைத்தனர். "நபி பெருமானின் பேரரே தாங்கள் நாயகம் அவர்களைக் கனவில் கண்ட பேற்றினைப் பெற்றுள்ளீர்கள். நாங்களும் அன்னாரது உபதேசப்படி தாங்கள் ஏற்பாடு செய்யும் பயணத்தில் கலந்து கொண்டு நாயகம் அவர்களது காட்சியை காண்பதற்குரியோர்களாக முயற்சி செய்கின்றோம். ஆதலால் பாண்டியநாடு செல்வதற்கான பயணத்தில் நாங்களும் கலந்து கொண்டு இறைவனது மார்க்கத்தை