பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՅ நபிகள் நாயகம் வழியில் இபுராகிமை விளித்து ஏதோ சொல்வது போன்ற ஒசை ஆம் இப்பொழுது அந்த ஓசை செவிகளில் நன்கு தெளிவாகக் கேட்டது. எனது அருமைப் பேரரே தாங்கள் இந்த இளம் வயதில் இறைவன் மீதும் என் மீதும் கொண்டுள்ள பாசத்தையும் பற்று தலையும் பாராட்டுகிறேன். இவைகளுக்கு மேலாக எனது வாழ்க்கை யும் உபதேசங்களையும் பின்பற்றி அண்டை நாடுகளுக்குச் சென்று ஏக தெய்வ வழிபாட்டினை விளம்பரப்படுத்தியும், அந்தப் பகுதிகளிலுள்ள பாமர மக்களான பார்சிகளையும், குஜராத்தி மக்களையும் சாந்திமார்க்கமாகிய இஸ்லாத்தில் இணையுமாறு செய்த சாதனையை மிகவும் பாராட்டுகிறேன். தங்களைப் போன்ற இளைஞர்களின் கடமையும் குறிக்கோளும் இத்துடன் முடிந்துவிட வில்லை. இன்னும் அரபு நாட்டிற்குத் தென்கிழக்கே பாரத கண்டத்தின் மிகப் பெரிய பகுதி ஒன்று உள்ளது. அதன் தென் பகுதியில் உள்ள தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே இங்கிருந்து பலநூறு சமயத் தொண்டர்கள் சென்றுள்ளார்கள். பல தெய்வ வழிபாட்டிலும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத பழக்க வழக்கங்களிலும் தங்களைப் பிணைத்து கொண்டு அஞ்ஞானத்தில் வாழ்கின்ற அவர்களுக்கு அறிவு கொடுப்பதில் தங்கள் வாழ்க்கை அனைத்தையும் அர்ப்பணித் துள்ளார்கள். அவர்களது மண்ணறைகள் கடற்கரைகளிலும், காடு மேடுகளிலுமாக எங்கும் அமைந்துள்ளன. அங்குள்ள மக்கள் அவர் களை மஸ்த்தான்கள் என்றும் மலங்குகள் என்றும் அவுலியாக்கள் என்றும் ஏற்றிப் போற்றி அவர்களின் ஜீவியத்தை நினைவில் கொண்டு வருகின்றனர். அவர்களது பணி முடிவடையவில்லை. உம்மைப் போன்ற இளைஞர்கள் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அங்குள்ள மக்களை எல்லாம் வல்ல இறைவனின் வழிபாடுகளில் நாட்டம் கொள்ளச் செய்ய வேண்டும். அவர்கள் நல்ல மனிதர்களாக அண்டை அயலாரை மதித்து நட்பும், தோழமையும், பாராட்டும் குடிமக்களாக, சகோதரர்களாக மாற்ற வேண்டும். தங்களுக்கு ஏற்கனவே பெற்ற அனுபவங்களைக் கொண்டு இந்த பணியையும்