பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 37 இறைவனது அற்புதக் கொடையாகிய பகுத்தறிவினால், சுல்த்தான் செய்யது இப்ராகிம் அவர்கள் புகுத்திய மெய்ஞான ஒளியினால் சிறந்து விளங்கினர். அந்தப் பாமர மக்கள் உலகின் பல பகுதிகளிலும் அப்பொழுது வாழ்ந்து வந்த பல்லாயிரக் கணக்கான ஒரிறைக் கொள்கையினரான இஸ்லாமிய மக்களது அணியில் ஒன்றுசேர முயன்று வந்தனர். இந்த அரிய தொண்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தங்களது நாட்டையும் வீட்டையும் துறந்து இறைவனது பாதையில் தொண்டாற்றி வந்த சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களும், அவர்களது தோழர்களும் தங்களது பணியில் முழுவெற்றியை எய்தியதாக மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினர். அடுத்து அவர்களது போதனையினால் ஈர்க்கப்பட்ட மக்கள் வழி தவறிவிடாமல் தொடர்ந்து ஏக இறைக் கொள்கையில் ஈடுபட்டு வாழ்ந்து வருவதற்காக ஆங்காங்கு பல தொழுகைப் பள்ளி வாசல்களையும், அந்த குறுகிய காலத்தில் அமைத்துக் கொடுத்தார்கள். அந்தப் பள்ளிவாசல்களில் இருந்து 5 வேளை தொழுகைக்காகக் கூவி அழைக்கப்படும் பாங்கு என்னும் அழைப்பினைக் கேட்கும் மக்கள் 'அல்லாஹ அஹ்பர்' என மன உறுதியுடன் இறைவனை வணங்கு வதற்குச் செல்லத் தவறமாட்டார்களல்லவா? மீண்டும் மதினா நகர் பள்ளிவாசல் வைகறைத் தொழுகையில் சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அந்த வைகறை நேரத்தின் கிழக்கே உதயத்தின் கீறல்கள் காணப்படுவதற்கு முன்னர் அந்தப் பகுதி முழுவதும் மெல் இருட்டும். மென்மையான அமைதியும் இருந்து வந்தது. இந்தச் சூழ்நிலையை இன்னும் சிறப்புடையதாகச் செய்யும் வகையில் அவரது சிந்தனைகளின் தொடர்ச்சியாக வெண் நிலவு போன்ற இனிய ஒளிப்படலம் எழுந்தது. அதன் ஊடே அழகும், அமைதியும் நிறைந்த ஒரு பெரியவரின் தோற்றம். அவர் சுல்த்தான் செய்யது