பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 43 குழுவினர் முதன்முறையாக இந்தியத் திருநாட்டின் தென்றல் காற்றை சுவாசித்து மகிழ்ந்து சிலநாட்கள் அங்கு ஒய்வு எடுத்தனர். பயணக் களைப்பினின்றும். பருவகால மாற்றங்களினின்றும் நீங்கியவர்களாக அந்தக் குழுவினர் தங்களது பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர். கோழிக்கோடுதுறைமுகம் மேற்குக் கடற்கரையில் பல நூற்றாண்டுகளாக அரபு நாடுகளுடனான கடல் வாணிபத்தில் செழித்தோங்கிய பெருநகரம் இது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் அரபு நாட்டில் அண்ணல் நபிகள் நாயகம் அவர்களது வாழ்நாளின் பொழுதே இஸ்லாமிய அரபு வணிகர்கள் இந்த நகருக்கு வந்து தங்கி வாணிபத் துறையில் செழித்து நிலைத்து இருந்தனர். சுல்த்தான் செய்யது இபுராகிமும் அவரது குழுவினரும் கோழிக்கோடு அடைந்த பொழுது அவர்களுக்கு அந்த மக்கள் அன்பு நிறைந்த வரவேற்பினை நல்கி மகிழ்ந்தனர். அந்த நகரில் துறைமுகத்தை அடுத்திருந்த மாலிக் இபுனு தீனார் பள்ளி வாசலிலும், அடுத்த குடியிருப்புகளிலும், அந்தக் குழுவினர் ஒருவாரம் தங்கியிருந்தனர். ஒரு மாத கால கடல் பயணத்தில் களைத்துப் போய் இருந்த அவர்களுக்கு கோழிக்கோடு மக்களின் அன்பும், வரவேற்பும், புதிய தெம்பையும் மகிழ்ச்சியையும் ஊட்டின. மேலும் அவர்கள் அந்த ஊரின் மன்னராக இருந்த சேரமான் பெருமாளுக்கும், அரபு வணிகர்களுக்கும் இடையில் நிலவிய நேசமான தொடர்புகளைப் பற்றிய செய்திகளை அந்தக் குழுவினர் கேட்டறிந்த பொழுது அவர்கள் மேலும் கூடுதலான மகிழ்ச்சியை அடைந்தனர். கொல்லங்கோடு அரசர் சேரமான் பெருமாள் கடந்த சில ஆண்டுகளாகவே நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை யினையும் அவர்கள் அரபு நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் அகில உலக மக்களுக்கும் வழங்கிய ஆன்மீகச் செய்திகளையும், வாழ்ந்து காட்டிய சிறந்த வாழ்க்கை முறையினையும் வணிகர்கள்