பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நபிகள் நாயகம் வழியில் மூலம் கேட்டு அறிந்த அந்த மன்னருக்கு, இஸ்லாம் என்ற புதிய சமயத்தின்பால் மிகுதியான ஈர்ப்பும் அக்கறையும் ஏற்பட்டது. நாளடைவில் ஏகதெய்வ வழிபாட்டினைப் பிரச்சாரம் செய்து மறைந்த முஹமது நபி அவர்களது பிறந்த நகரான மக்காவையும், புகழுடம்பு தாங்கிய மதினா நகரையும் சென்று தரிசிக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு அதிகரித்து வந்தது. ஒரு நாள் வைகறையில் கொல்லங் கோட்டிலிருந்து அரபு தாயகம் திரும்பிய வணிகக் குழுவினருடன் கொல்லங்கோடு மன்னரும் அரபு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். மக்கா, மதினா நகரங்களைத் தரிசித்து மகிழ்ந்த மன்னர் இஸ்லாத்தை ஏற்றதுடன் அப்துல் ரஹ்மான் சாமிரி என்ற புதிய பெயரையும் சூட்டிக் கொண்டார். சாமிரி' என்பது காளைமாட்டினை வணங்கும் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதைக் குறிக்கும் சொல். ரஹ்மான் என்பது எல்லையற்ற கருணை பொருந்திய இறைவனது திருப்பெயர். அப்துல் என்பது இறைவனது அடிமை என்பதாகும். சில நாட்கள் மதினா நகரில் முஹமது நபி அவர்கள் அடக்க பீடத்திற்கு முன்பாக அமர்ந்து தியானத்திலும், தொழுகையிலும் ஈடுபட்டு ஆன்மீகப் பற்றுக் கொண்ட கொல்லங்கோடு மன்னர் தாயகம் திரும்புவதற்கு அரபு நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்த ஜபர் என்ற துறை முகத்தை அடைந்தார். அங்கு அவருக்கு உடல்நலிவு ஏற்பட்டது. முன்பின் அறிமுகமில்லாத, அந்த ஊரின் மக்கள் அப்துல் ரஹ்மான் சாமிரியை அன்புடனும் அனுதாபத்துடன் கவனித்து வந்தனர். அவர்களில் ஒரு அரபுப் குடும்பத்தினர். பேணிக்காத்து வந்தனர். அந்தக் குடும்பத் தலைவரின் பெயர் மாலிக் இபுனு தீனார் என்பதாகும். அவர்களின் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் இருந்து வந்த மன்னருக்கு உடல்நிலையில் ஒரளவு முன்னேற்றம் இருந்தாலும் அவரைத் தாக்கிய நோய் அவரை விட்டு அகன்றபாடில்லை. பல நாட்கள், பல மாதங்களாகி விட்டன. கொல்லங்கோட்டிற்குப் பயணம் செய்யத் தக்க உடல்நிலை அவருக்கு ஏற்படவில்லை. ஆதலால், தொடர்ந்து அவரைக் கவனித்துப் பராமரித்து வந்த மாலிக் இபுனே தினாரின் தங்கையை மணம் செய்து கொண்டார். மன்னரைப் பற்றிய