பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 45 தகவல் ஏதும் இல்லாமல் பரிதவிக்கும் கொல்லங்கோடு மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக மாலிக் இபுனு தீனாரை தமது பிரதிநிதியாக கொல்லங் கோட்டிற்கு அனுப்பி வைத்தார். அவரிடம் தக்க அறிமுகக் கடிதங்களை வழங்கி அவருக்கு ஏற்ற உதவிகள் அனைத்தையும் செய்யுமாறு கேரளத்தில் பல பகுதிகளில் இருந்த மன்னர்களுக்கும் பரிந்துரை அனுப்பி வைத்தார். மாலிக் இபுனு தீனார் கேரளம் வந்தபோது மக்கள் மன்னரைப் பற்றிய செய்தியைத் தெரிந்து மகிழ்ந்ததுடன். அவரின் போதனைகளைக் கேட்டு புதிய சமயமாகிய இஸ்லாத்தையும் ஏற்றனர். அவர்களின் அன்றாட வழிபாட்டிற்காக கேரளத்தில் 8 ஊர்களில் மாலிக் இபுனு தினார் புதிய பள்ளி வாசல்களை நிர்மாணித்தார். அவைகளில் ஒன்றுதான் செய்யது இபுராகிம் தங்கியிருந்த அந்த கோழிக்கோடு பள்ளிவாசலாகும். இந்த செய்திகள் எல்லாம் அறிந்த சுல்த்தான் செய்யது இபுராகிமுக்கும் அவரது குழுவினருக்கும் தமிழ்நாட்டுப் பயணத் திற்கான தெம்புமிகுந்தது. சில நாட்களில் அந்தக் கோழிக்கோட்டி லிருந்து புறப்பட்டு ஹிஜ்ரி 583 - இல் தெற்கே பாண்டிய நாட்டின் பெரும் துறைமுகமான காயல் பட்டினத்தைப் போய்ச் சேர்ந்தது.