பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 6 பாண்டிய நாட்டின் அரசியல் குழ் 6 Ծ)6Ն) முடியுடை மூவேந்தர்களில் ஒருவரான பாண்டிய மன்னர் களைப் பற்றிய சிறப்பான செய்திகளைச் சங்க இலக்கியங்களும் வரலாறும் தெரிவிக்கின்றன. சேர, சோழ மன்னர்களுக்கு இல்லாத தனிப் பெரும் சிறப்பு இந்தப் பாண்டிய மன்னர்களுக்கு மட்டும் உரியதாகும். காரணம் நமது தாய்மொழியாகிய தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றிச் சிந்தித்துச் செயல்பட்டவர்கள் இந்த மன்னர்கள். ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ்மொழியின் தனிப்பெரும் சிறப்பினைக் காத்து வளர்ப்பதற்காக மூன்று தமிழ்ச் சங்கங்களை இந்த மன்னர்கள் தங்கள் நாட்டில் நிறுவினர். இவர்களது கோநகரான மணலூரிலும் கபாடபுரத்திலும் பின்னர் இன்றைய நான்மாடக் கூடலாகிய மதுரையிலும் இருந்து அவை செயல்பட்டன. இந்த மன்னர்களில் சிலரைப் பற்றிய சிறப்பான செய்திகளை சங்க இலக்கியங்கள் வழங்குகின்றன. 'கானப்பேர் எயில்கடந்த உக்கிரபாண்டியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். கடலுள் மாய்ந்த இளம் வழுதி அறிவுடை நம்பி