பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 47 நின்றசீர் நெடுமாறன் வரகுண பாண்டியன்' ஆகியவர்கள் பெருமைக்குரிய பாண்டிய மன்னர்கள். இவர்களின் வழித்தோன்றல்களாக மதுரை மாநகரில் கி.பி. 11, 12 - ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த பாண்டியர்களது வரலாறு தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளது. இராஜராஜ சோழதேவன் ஆட்சிக் காலம் முதல் ஆதிக்க உணர்வும் நாடுகள் பிடிக்கும் நப்பாசையும் சோழ மன்னர்களிடம் வளர்ந்து வந்ததால், மதுரைப் பாண்டியநாடு சோழப் பேரரசின் அங்க மாயிற்று. இராஜேந்திர சோழன் காலத்தில் அவனது மக்கள் சோழ பாண்டியர்கள் என்ற சிறப்புப் பெயருடன் மதுரையை ஆட்சி செய்து வந்தனர். பாண்டியர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னர்களாகவும், சிலபோழ்து அவர்களது அனுதாபத்திற்குரியவர் களாகவும் மதுரை ஆட்சியைச் சோழரிடமிருந்து பெற்று அவர்களுக்கு உட்பட்டவர்களாக ஆட்சி செய்து வந்தனர். இந்த நூற்றாண்டுகளில் மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் பராக்கிரம பாண்டியனும் திருநெல்வேலிப் பகுதியில் சடையவர்மன் குலசேகர பாண்டிய மன்னனும் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்களிடையே எழுந்த பிணக்கும் பொறாமைத் தீயும் பாண்டிய நாட்டில் உள்நாட்டுப் போராக மாறியது. மதுரை, பராக்கிரம பாண்டியனுக்குச் சொந்தமானதும், மதுரை நகருக்கு மேற்கே அமைந்திருந்ததுமான சோழ குலாந்தக சதுர்வேதி மங்கலம் என்ற குருவித்துறையை கைப்பற்றிய சடையவர்மன் குலசேகர பாண்டியன், மதுரையை நோக்கி முன்னேறி வந்தான். இவனது மாமனாரான கொங்குச் சோழனது உதவியிருந்ததால் படை யெடுப்புத் தீவிரமாகியது. இதனை அறிந்த பராக்கிரம பாண்டியன் தனது நண்பனான இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவிடம் படை உதவி கோரினான்