பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நபிகள் நாயகம் வழியில் அவனது உதவி கிடைப்பதற்கு முன்னரே சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1166-இல் பராக்கிரம பாண்டியனைப் போரில் கொன்று மதுரையைக் கைப்பற்றினான். ஆனால் இலங்கை மன்னனது படைகள் கி.பி.1169-இல் மதுரையை நோக்கி முன்னேறி வந்து குலசேகர பாண்டியனை, மதுரையிலிருந்து துரத்தி விட்டு இறந்து போன பராக்கிரம பாண்டியனின் மகன் வீரபாண்டியனை கி.பி.1170-இல் மதுரை அரியாசனத்தில் அமர்த்தி முடிசூட்டியது. சோழ நாட்டிற்கும் இலங்கை நாட்டிற்கும் இடையே பகைமை உணர்வுகள் இருந்து வந்ததால், குலோத்துங்க சோழன் குலசேகர பாண்டியனுக்கு உடனடியாகப் படை உதவி அளித்து இலங்கைப் படைகளை மதுரையை விட்டு ஓடும்படி செய்தான். வீரபாண்டி யனுக்குப் பதிலாக மதுரை மன்னனாக கி.பி. 1173 - இல் குலசேகர பாண்டியனை நியமித்தான். மதுரை மன்னனாக இருந்து வந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன், சோழர்கள் தமக்குச் செய்த நன்றியினை நாளடைவில் மறந்து விட்டு இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவிடம் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டான். இதனை அறிந்து சீற்றம் கொண்ட சோழ மன்னன் இராசாதிராசன் மற்றொரு படை யெடுப்பினை மதுரை மீது ஏவிவிட்டான். குலசேகர பாண்டியன் சோழ்ப் படைகளால் தோற்க்கடிக்கப்பட்டு திருநெல்வேலிச் சீமைக்கு ஓடிவிட்டான். வீரபாண்டியனை மீண்டும் மதுரை மன்னனாக சோழர்கள் கி.பி. 1173 - இல் நியமித்தனர். இந்த ஆண்டிற்குப் பிறகு சடையவர்மன் குலசேகர பாண்டியனைப் பற்றிய செய்திகள் எதுவும் வரலாற்றில் இடம்பெறவில்லை. வீரபாண்டியன் ஆட்சி கி.பி. 1185 வரை நீடித்தது. இதற்கிடையில் பாண்டியரது இளவலான மாணாபரணன் என்பவனை மணந்திருந்த இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவின் சகோதரிக்குப் பிறந்த சடையவர்மன் பூரீ வல்லபன் என்பவன் இலங்கையிலிருந்து தப்பி வந்து மூன்றாம் குலோத்துங்க