பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 4E) சோழனிடம் அடைக்கலம் புகுந்தான். நாளடைவில் இந்த சடைய வர்மன் பூரீ வல்லபனுக்கும் மதுரை மன்னன் வீரபாண்டியனுக்கும் பகைமை ஏற்பட்டதால் வேறு வழியில்லாமல் வீரபாண்டியன், அப்போது ஆட்சியிலிருந்த இலங்கை மன்னன் நிசங்க மல்லனது உதவியை நாடினான். மீண்டும் இலங்கைப் படைகளும் மூன்றாம் குலோத்துங்க சோழனது படைகளும் பாண்டிய நாட்டில் பல இடங்களில் பொருதின. முடிவு கி.பி. 1186 - இல் வீரபாண்டியன் சோழப் படைகளிடம் தோற்றும் ஓடினான். தொடர்ந்து வீரபாண்டியன் தனது எஞ்சிய பலத்துடன் குலோத்துங்க சோழனது படைகளை நெட்டுரில் சந்தித்தும் அங்கும் அவனுக்குப் பெருத்த தோல்வி ஏற்ப்பட்டது. பின்னர் பாண்டிய நாட்டை விட்டு கேரள நாட்டிற்கு ஓடிவிட்டான். இவனது முடிவு பற்றிய செய்திகள் தெளிவாக இல்லை." கி.பி. 1186 - இல் மூன்றாவது குலோத்துங்க சோழனால் மதுரை மன்னனாக நியமிக்கப்பட்ட விக்கிரம பாண்டியன் அமைதியாக ஆட்சி செய்து கி.பி. 1190ல் இறந்தான்." இத்தகைய மிகவும் குழப்பமான சூழ்நிலையில் பாண்டியநாடு கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி இருந்து வந்ததை ஆவணங் களுடன் கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றன. இதற்கு மூல காரண மாக அமைந்தது. சோழர்களது ஆதிக்க உணர்வுதான் எனக் குறிப் பிட்டால் அது மிகையாகாது. சோழர்கள் தங்களைப் போன்ற தொன்மையான முடியுடை மன்னர்கள் பாண்டியர்கள் என்பதை மறந்து, பாண்டியர்களைத் தங்களது கைப்பொம்மைகளாக இயக்கி வந்ததும் பாண்டிய நாட்டு அரசியல் பேரழிவிற்குப் பொருத்தமான காரணம் என்பதும் விளங்கும். 1) சிதம்பரம் கல்வெட்டு ஏ.ஆர்.எண். 25/1903 குடந்தை என். சேதுராமன் பாண்டியர் வரலாறு (1989) பக்கம் 71. 2) சதாசிவப் பண்டாரத்தார் டி.வி. பாண்டியர் வரலாறு (1940) பக்கம் 105. дѣ. - 4