பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5Յ நபிகள் நாயகம் வழியில் எடுத்துச் சொல்லி மக்களை ஆன்மீகப் பாதையில் அழைக்குமாறு செய்தார். ஒரிறைக் கொள்கை என்பது தமிழ்நாட்டிற்கு புதியதல்ல. சங்ககாலத்தில் இருந்த புலவர் பெருமக்களும் பின்னர் 10,11 - ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சித்தர்களும் தமிழக மக்களுக்குக் காட்டிய ஆன்மீக வழியே இதுவாகும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே உணர்மின்' என்ற திருமூலரின் திருமந்திரமும் ஏனைய சித்தர்களது போதனையும் அதுதான். இந்து சமயத்தில் இரண்டு பிரிவுகளில் ஒன்றான வைணவம், வலியுறுத்தும், அத்வைதம் என்ற கொள்கை இந்த ஒரிறைக் கொள்கையே ஆகும். ஆதலால் இஸ்லாம் என்ற ஒரிறைக் கொள்கையை சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களும் அவரது குழுவினரும் பிரச்சாரம் செய்த பொழுது, பாண்டிய நாட்டு மக்களில் கணிசமான பகுதியினர் அந்தக் கொள்கையை முழுமை யாக ஏற்று தாங்கள் கடைப்பிடிப்பதற்கான ஆன்மீக வழியாகக் கொண்டு ஒழுகலாயினர். இத்தகைய பிரச்சாரத்தினால் ஈர்க்கப்பட்ட வர்களில் தமிழக சித்தர்களில் ஒருவரான சதுரகிரிமலையைச் சேர்ந்த இராமதேவர் என்பவரும் ஒருவராவார். இஸ்லாமிய இறைக் கொள்கை இவரது உள்ளத்திற்கு மிகவும் இதமாக இருந்த காரணத் தினால் இஸ்லாமிய சமயத்தைத் தழுவிய இந்த சித்தர் இஸ்லாமியப் புனிதத் தலங்களான மக்கா, மதினா ஆகிய தலங்களுக்குப் புனிதப் பயணம் சென்று திரும்பினார். அவர் தமது பெயரையும் யாக்கோப்புச் சித்தர் என மாற்றிக் கொண்டார். அக்காலத்தில் தமிழகத்தில் பதினென் சித்தர்களுள் ஒருவராக போற்றப்பட்டவர் இராமதேவர் என்பவர், இவரே. இவர் ஞானப்பாடல்களுடன் வைத்திய முறைச் சம்பந்தமாக பல பாடல்களையும் பாடியுள்ளார். அந்தத் தொகுப்பு யாக்கோப்பு சித்தரது வைத்திய சிந்தாமணி எனப்