பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 57 வாசல்களை நிறுவியுள்ளார். சோழ நாட்டிலும் வணிகத் தொடர்பு கொண்டுள்ள எங்களது நாட்டு இஸ்லாமிய வணிகர்கள் சோழ மன்னரது தலைநகரான உறையூரில் ஒரு தொழுகைப் பள்ளிவாசலை ஏற்படுத்தி உள்ளனர். இந்த பள்ளி வாசலை ஹாஜி அப்துல்லாபின் அன்வர் என்ற பெரியார் கி.பி. 727 - இல் நிர்மாணித்ததை அங்குள்ள அரபி மொழி கல்வெட்டு தெரிவிக்கின்றது. தஞ்சையில் ஆட்சிபுரிந்த இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் எங்கள் நாட்டு வணிகர்களுக்கு வாணிபச் சலுகைகளை வழங்கி வந்ததுடன், அவர்களது அவைக் களத்தில் சிறப்பான இடங்களையும் நல்கியிருந்தனர். இந்த வணிகர்கள் தமிழ்நாட்டின் கடற்கரைகளில் நிலையாகத் தங்கி அஞ்சு வண்ணம் என்ற குடியிருப்புகளையும் அமைத்துத் தமிழ்நாட்டில் வாணிபம் செய்து வந்ததுடன், தங்களது வாணிபச் செலாவணிக்கு ஏற்றவாறு தங்களது பூர்வீக நாடான அரபு நாட்டில் வழங்கி வந்த தினார் (பொன் நாணயம்) திர்கம் (வெள்ளி நாணயம்) நாணயங்களைத் தமிழ் நாட்டிலும் செலவாணியில் விட்டுள்ளனர். அவை முறையே தமிழ் மக்களது உச்சரிப்பிற்கு ஏற்றவாறு தினாரா, திரம்மா என்று வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் தமிழ் மன்னர்களது வழியில் பாண்டிய நாட்டு வேந்தரான தாங்களும் எங்கள் குழுவினருக்குத் தங்கள் நாட்டில் ஒரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்கு மேலான அனுமதியை வழங்கி உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.' சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது வேண்டுகோளைப் பொறுமையுடன் கேட்டறிந்து பாண்டியன் குலசேகரன், சுல்த்தான் அவர்களுக்கு உரிய அனுமதியைத் தயக்கமின்றி வழங்கியதுடன் அவர்களது குழுவினருக்குத் தேவைப்படும் உதவி புரிவதாகவும் வாக்களித்தார். மன்னருக்கு நன்றி கூறிய சுல்த்தான் அவர்கள் மகிழ்ச்சியுடன் காயல் நகர் கடற்கரை முகாமிற்குத் திரும்பி னார்கள்...... சுல்த்தான் அவர்கள் தமது குழுவினரைப் பல சிறிய குழுக்களாகப் பிரித்துத் தென் பாண்டிய நாட்டில் பல பகுதிகளிலும் ஒரிறைக் கொள்கையையும், நபிநாதர் அவர்களது பணிகளையும்