பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5Յ நபிகள் நாயகம் வழியில் 'தங்களது நாட்டிற்கு வடமேற்கே உள்ள அரபு நாட்டில் இருந்து வந்துள்ளோம். எங்களது நாட்டிற்கும். தங்களது நாட்டிற்கும் கடந்த பல நூற்றாண்டுகளாக வாணிபத் தொடர்புகள் இருந்து வந்துள்ளதை மன்னர் அவர்கள் அறிந்திருப்பீர்கள். தங்கள் நாட்டிலிருந்து அகிலும், துகிலும், மிளகும் எங்களது நாட்டிற்குக் கொண்டு வந்து விற்கப்பட்டன. பண்டமாற்றுதல் முறையில் எங்கள் நாட்டு வாசனைப் பொருள்களான அத்தர், பன்னிர், தோல் பொருட்கள் மற்றும் பொன், தங்கள் நாட்டு வணிகர்களுக்கு விற்கப்பட்டு வந்தன. ஆதலால் எங்களுக்கு மிகவும் அறிமுகமான தமிழ்நாட்டிற்கு அரபு நாட்டு மதினநகரின் குறுநில மன்னனான நானும், எனது குழுவினரும் சமயத் தொண்டிற்காக தங்கள் நாட்டிற்கு நேற்று வந்து கரையிறங்கினோம்.' 'எங்களது பயணத்தின் ஒரே இலட்சியம் மக்களுக்கு ஏகதெய்வ கொள்கையைப் பற்றிப் பிரச்சாரம் செய்வது மட்டுமாகும். எண்ணறிய பிறவிகளில் மிகச் சிறந்ததான, மனிதப் பிறவியைப் பெற்றுள்ள மக்கள் இறைவன் வழங்கியுள்ள விழுமிய அறிவினைக் கொண்டு நன்மை தீமைகளில் பகுத்து அறிந்து இறைவனது வழியில் தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் இறைவனது கட்டளையாகும். இதனை என் போன்ற தொண்டர்கள் கடந்த பலநூறு ஆண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்தின் பல நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தின் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும், இந்த நாட்டில் பஞ்சாப், சிந்து குஜராத் பகுதிகளிலும், பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். கேரளக் கரையில் ஆட்சி செய்த சேரமான் பெருமாள் மன்னரது பிரதிநிதியான மாலிக்கிப்னுதினார் என்ற புனிதர் கி.பி. 9-ம் நூற்றாண்டில் கேரளா நாடு முழுவதும் ஒரிறைக் கொள்கையான இஸ்லாத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததுடன் ஆங்காங்கு பல தொழுகைப் பள்ளி 1. Neelakanda Shastri - K.A. Foreign Notices of South India (1948) Page -