பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 55 நடைமுறைகளும் பாண்டிய நாட்டு மக்களை அவர்கள் பின்பற்றி வந்த சமயத்தின் பால் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினர். இந்த வணிகர்களைத் தொடர்ந்து பாண்டிய நாட்டிற்கு வந்த இஸ்லாமியத் துறவிகளான இறைநேசர்கள், வலிமார்கள், செய்குகள், தர்வேஷ்கள், மஸ்தான்கள் என்ற சூஃபிகளது எளிய வாழ்க்கையும் இனிய பேச்சுக்களும், ஆரவார, அர்த்தமற்ற சடங்குகளும் இல்லாத இறை வழிபாட்டு முறைகளும் தமிழ் மக்களது சிந்தனையில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன. இத்தகைய சாதகமான சூழ்நிலையில் சுல்த்தான் செய்யது இபுராஹிம் அவர்களது பணி எளிதாக அமையத் தொடங்கியது. தென்பாண்டிய நாட்டில் தாமிரபரணி ஆறு வங்கக் கடலில் கலக்கும் சங்கமம் பகுதியில் காயல்நகர் அமைந்திருந்தது. இந்த ஆற்றின் போக்கு பல காலங்களில் மாற்றம் அடைந்து வந்ததால். இந்த காயல் நகருக்கு மேற்கே சற்றுத் தொலைவில் புன்னைக் காயல் என்ற ஊரும் அதற்கு அப்பால் பழைய காயல் என்ற ஊரும் இருந்து வரலாற்றில் மறைந்துவிட்டன. பழைய காயல் என்ற அந்த நகரம் சங்க இலக்கியங்களில் கொற்கை என்றும் கி.பி. 3,4 - ஆம் நூற்றாண்டுகளில் தமிழகக் கடற்கரைக்கு வந்த தாலமி போன்ற கிரேக்க நாட்டு நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ள 'கோல்கை' என்பதும் இந்த ஊரேயாகும்' சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களும் அவரது உதவியாளர் இருவரும் அப்போது காயலில் இருந்த சடையவர்மன் குலசேகர பாண்டியனைச் சந்திப்பதற்காக மன்னரது மாளிகைக்குச் சென்றனர். அரபு நாட்டிலிருந்து அந்தக் குழுவினர் வந்திருப்பது அறிந்து அவர்களைச் சந்திக்க மன்னர் இணங்கினார். பாண்டிய மன்னரைச் சந்தித்த சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் மன்னரிடம் தெரிவித்ததின் சுருக்கம் வருமாறு. 1. திருச்சிராப்பள்ளி கோட்டைப் பள்ளி வாசலிலுள்ள அரபிக் கல்வெட்டு.