பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நபிகள் நாயகம் வழியில் அழைக்கப்பட்டதையும் அதில் வாழ்ந்தவர்கள் அஞ்ச வண்ணத் தவர், 'யவனர், சோனகர் எனவும் வழங்கப்பட்டனர் என்பதையும் கி.பி. 12-ம் நூற்றாண்டு இலக்கியமான பல்சந்தமாலையும் பல கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றன. கி.பி. 7, 8 - ஆம் நூற்றாண்டு களில் தமிழகத்தில் ஆரியர்களது வைதீகச் செல்வாக்கினாலும், அவர்களது நீதி நூலான மனுசாஸ்திரத்தின்படி தமிழக மக்கள் நான்கு பிரிவுகளாக (வர்ணத்தினராக) பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர் என அவர்கள் வழங்கப்பட்டு வந்தனர். இத்தகைய சாதிப் பிரிவினைச் சூழலில் அரபிய முஸ்லீம்கள் வாழ்ந்து வந்ததால் அவர்களை ஐந்தாவது வர்ணத்தினராக அஞ்சு வண்ணத்தினராக கொள்ளப்பட்டனர். - இந்தப் புதிய சமயக் கொள்கை பாண்டிய நாட்டிலும் அதன் தென் பகுதியான நாஞ்சில் நாட்டிலும் தமிழ் மக்களின் ஆங்காங்கு பெளத்த, சமண சமய கொள்கைகளைப் போன்று ஒரு சிலரால் பின்பற்றப்பட்டு வந்தன. குளச்சல், திருவிதாங்கோடு, தக்கலை, அஞ்சுவண்ணம் ஆகிய ஊர்கள் இத்தகைய புதிய சமயத்தினரின் குடியிருப்புகளாகத் தொடர்ந்து வந்தன. பொதுவாக தமிழ்நாட்டில் சைவ, வைணவ கொள்கைகள் மக்களிடம் வலுவாகப் பரவியிருந்த பொழுதும் கி.பி. 10ம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய திருமூலர் முதலான பதினென் சித்தர்கள் இந்த சமயங்களைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். சைவ வைணவ சமயங்களில் மலிந் துள்ள பொருளற்ற சடங்குகள், நடைமுறைகள் சிறுதெய்வ வழி பாடுகள் ஆகியன இந்த விமர்சனத்திற்கு உரிய பொருளாக மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டு வந்தன. இத்தகைய விழிப்புணர்வு ஏற்பட்டு வந்த சமயத்தில். தமிழகம் வந்த அரபு முஸ்லீம் வணிகரது வணிக முறைகளும் வாழ்க்கை 1. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பு களவியற்காரிகை (1931) 2. நாகசாமி டாக்டர். ஆர். தஞ்சைப் பெருவுடையார்கோவில் கல்வெட்டுகள்.