பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 5Յ இந்தத் தகவலை கி.பி. 1573 ஆம் ஆண்டில் மதுரை மன்னராக இருந்த முத்துவீரப்ப நாயக்கர் இந்தக் கிராமங்களின் உரிமையினை பற்றிய சிக்கலை விசாரித்ததுடன், மதுரை நகர் கோரிப்பாளையம், பள்ளிவாசலுக்கு நேரில் சென்று சம்மந்தப்பட்ட ஆவணங்களை நேரில் பரிசீலித்து அறிந்து முடிவான உத்திரவைப் பிறப்பித்துள்ளார். கி.பி. 7 - ஆம் நூற்றாண்டில் அரபு நாட்டு வணிகர்கள் மேலே குறிப் பிட்டுள்ள கிராமங்களைப் பாண்டிய மன்னரிடம் கிரையம் வாங்கியதை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது ஆணை பற்றிய கல்வெட்டு (184 வரிகளைக் கொண்டது) இன்றும் அந்தப் பள்ளிவாசலில் பாதுகாக்கப்பட்டு வருவதை யாரும் காணலாம்.' இந்த கல்வெட்டின் முழுமையான வாசகம் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு செய்தி கி.பி. 11 - ஆம் நூற்றாண்டில் மதுரை மாநகருக்கு மாலிக்குல் முல்க் என்பவர் தமது சீடரான செய்யது அலியார்ஷா என்பவருடன் மதுரைப் பகுதியில் இஸ்லாமிய இறைக் கொள்கை பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார் என்பதனையும் ஆசிரியர் நெல்சன் அவர்களே தெரிவித்துள்ளார்கள். இவ்விதம் இஸ்லாமிய இறைக்கொள்கை பற்றிப் பிரச்சாரம், பாண்டிய நாட்டில் அமைதியான முறையில் சுல்த்தான் செய்யது இபுராகிமின் வருகைக்கு முன்னரே தொடர்ந்து வந்துள்ளதை அறியமுடிகிறது. என்றாலும் சுல்த்தான் செய்யது இபுராகிமின் காயல் நகர் வருகை தான் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் தெளிவான விபரங்களைத் தருவதாகவும் அமைந்துள்ளது. இவரது ஓரிறைக் கொள்கையை 10 ஆண்டுகளுக்கு மிகுதியாகப் பாண்டிய நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் ஏற்று வந்தனர் என்பதை ஷஹாதத் நாமா என்ற பார்சி மொழி நூலும், மீசல் வண்ணக்களஞ்சியப் புலவரது இலக்கியமான தீன் விளக்கம் என்ற நூலும் உறுதிப்படுத்துகின்றன. இஸ்லாமிய அரபிகளது குடியிருப்புகள் பெரும்பாலும் கிழக்குக் கடற்கரை துறை முகங்களை ஒட்டி எழுந்தன. அவை அஞ்சு வண்ணம் என 1 கோரிப்பாளையம் கல்வெட்டு A.R.No.