பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நபிகள் நாயகம் வழியில் செய்திக்கும் 10 வருட வித்தியாசம் உள்ளது. சுல்தான் செய்யது இபுராகிம் அவர்களது பாண்டிய நாட்டு வருகையும் அங்கு தங்கியிருந்து வீரத் தியாகியானதுமான காலம் இஸ்லாமிய பஞ்சாங்க கணக்குப்படி ஹிஜ்ரி 583 - 594 ஆகும்.' இதனைப் போன்றே சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை விளம்புகின்ற இஸ்லாமிய வரலாற்றுச் செய்திகளுக்கும் அன்றைய பாண்டிய மன்னர்களது கல்வெட்டுச் செய்திகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் இருப்பதை அடுத்தடுத்துக் காண்போம். சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது வருகைக்கு முன்னரே சிலர் பாண்டியநாட்டில் இஸ்லாமிய இறைக் கொள்கை களைப் பரப்பியதை வரலாற்று ஏடுகளில் காணத்தக்கதாக உள்ளன. அவைகளில் முதலாவது செய்தி கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக உள்ளது. இஸ்லாம் என்ற புதிய சமயத்தின் ஒளிமிகுந்த கதிர்கள் அரபுத்தாயத்திற்கு வெளியே முதன் முதலாக தமிழ்நாட்டின் மேற்குக் கரையிலும், கிழக்குக் கரையிலும், பரிணமிக்கத் தொடங்கின. பாண்டிய நாட்டில் மட்டும் தான் இதற்கான உறுதியான ஆதாரங்கள் இருந்துள்ளன. கூன்.பாண்டியன் என்றும், நின்றசீர் நெடுமாறன் என்றும், நூலாசிரியர்களால் அழைக்கப்பட்ட பாண்டிய மன்னரது ஆட்சிக் காலத்தில் வணிகம் நிமித்தமாக வந்த இஸ்லாமிய அரபி வணிகர்கள், மதுரையில் இருந்து வந்தனர். இவர்கள் தங்களது குடியிருப்புகளை பீபிகுளம், சொக்கிகுளம், சொரிக்குடி, கண்ணா நேம்பல், சிறுதுர், திருப்பாலை என்ற மதுரையை அடுத்த ஆறு ஊர்களில் அமைத்து வாழ்வதற்காகப் பாண்டிய மன்னனிடம் பதினா யிரம் பொன்னை விலைப் பிரமானமாகக் கொடுத்து வாங்கினார் என்பதை மதுரைச் சீமை மேன்யுவலில் குறித்துள்ளார்கள்." 1) வடிகீதுசரிதை (1952) பக்கம் 2) Nelson – Manual of Madura Country (1861)