பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 7 புதிய சமயத்தைப் பரப்பும் பணி இத்தகைய சூழ்நிலையில் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் காயல்நகரை கி.பி. 1162 முதல் கி.பி. 1177 வரை கோநராகக் கொண்டு ஆட்சி செய்தான் என்பது வரலாறு. இதனை பூதலமடந்தை என்று தொடங்கும் மெய்க்கீர்தியின்படி குழப்பமான நிலையை மேலும் குழப்பும் வகையில் சடையவர்மன் குலசேகர தேவன் என்ற மற்றொரு பாண்டியன் கி.பி. 1190 முதல் கி.பி. 1218 வரை நெல்லைப் பகுதியில் ஆட்சி செய்தான் என்பது மற்றொரு செய்தி. இவனது மெய்க்கீர்திகள் 'பூவின்கிழத்தி' எனத் தொடங்குவதைக் கல்வெட்டுகளில் காணலாம். முன்னர் சொல்லப்பட்ட சடையவர்மன் குலசேகரன். மாறவர்மன் பூரீ வல்லபபாண்டியன் (கி.பி. 1145 - 62) என்பவனது மகனாவான். சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் கி.பி. 1187-இல் (ஹிஜ்ரி 683-ல்) வந்தபோது இந்த மன்னன் தான் காயல் நகரில் அப்போது கொழுவீற்றிருத்தல் வேண்டும் என்பது உறுதி. ஆனால் கல்வெட்டறிஞர் மறைந்த குடந்தை சேதுராமன் அவர்களது ஆய்வின்படி இந்த சடையவர்மன் குலசேகர பாண்டியனது ஆட்சிக் காலம் கி.பி. 1177-இல் முடிவடைந்ததாகத் தெரிய வருகிறது. சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது வருகைக்கும் சடையவர்மன் குலசேகரனது கல்வெட்டுச் 1) என். சேதுராமன் - பாண்டியர் வரலாறு 550 - 1371