பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 8 மதுரைப் போர் மதுரைக்கோட்டை இஞ்சிசூழ் மதுரை என இலக்கியங்கள் குறிப்பிடும் மதுரையில் சங்ககாலப் பாண்டியர்கள் கோட்டை கொத்தளம் அமைந்திருந்ததற்கான சான்றுகள் இல்லை. பிற்காலப் பாண்டியப் பேரரசு காலத்தில் இருந்து வலிமைமிக்க கோட்டை உருவாகி இருக்க வேண்டும். இதனை கி.பி. 16-ம் நூற்றாண்டில் விஜயநகர மண்டலேஸ்வரர்களும், மதுரை நாயக்க அரசு வழியினரும் மேலும் வலிமைமிக்க அரணாக மாற்றினர் என்பது வரலாற்று ஆய்வாளர் களது கருத்தாகும். காயல்நகரிலிருந்து புறப்பட்ட சுல்த்தான் செய்யது இபுராகிமும் அவரது சமயத் தொண்டரணியும், வழி எங்கும் இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களாக சுமார் 15 நாட்களுக்குப் பிறகு மதுரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இந்த அணியினர் மதுரைக்கு தெற்கே 5 கல் தொலைவிலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் முகாமிட்டு இருந்தனர். இரண்டு நாள் ஒய்விற்குப் பின்னர் சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் தங்களது குழுவினருடன் ஆலோசித்து பிறகு மதுரையில் இருந்த பாண்டிய மன்னருக்குத் துது அனுப்புவது என முடிவு செய்தனர். இந்தப் பணிக்கென அமிர் இஸ்கந்தர், செய்யது முஹைதின் என்ற இரு வீரர்களைத்