பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 61 தேர்ந்தெடுத்து பாண்டிய மன்னருக்கு ஒரு ஒலையையும் கொடுத்து துதராக அனுப்பினர். இந்த ஒலையில் அவர்கள் அரபு நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு ஏக இறைவனது சன்மார்க்க கொள்கையினைப் பிரச்சாரம் செய்வதற்கு வந்திருப்பதாகவும், ஏற்கனவே பாண்டிய நாட்டில் பரவியுள்ள இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கத்தை மேலும் வலுப்படுத்தி அனைத்து மக்களிடமும் அன்பும், மனித நேயமும் மிக்க ஆன்மீக உறவுகளை அதிகப்படுத்துவதற்கும் வந்திருப்பதாக சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். மேலும் இத்தகைய புனிதப் பணிக்குக் காயல் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யும் சடையவர்மன் குலசேகர பாண்டியன் வழங்கியுள்ள சிறப்பான வரவேற்பையும். அனுமதியும் நினைவு படுத்தி மதுரைப் பகுதியிலும் தங்களது சமயப் பிரச்சாரத்திற்கு உதவியும் ஒத்துழைப்பும் நல்குமாறு கோரியிருந்தார்கள். இஸ்லாமியத் தூதுவர்களது மடலினைப் பெற்றுப் படித்துப் பார்த்த பாண்டிய மன்னன், சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது கோரிக்கையைப் புறக்கணித்தான். ஏற்கனவே தமது சகோதரராக காயல் நகர் குலசேகரபாண்டியனுடன் நல்ல உறவுகளைப் பேணி வராத மதுரை மன்னருக்கு இந்த இஸ்லாமிய சமயக் குழுவினர் மிகுந்த எண்ணிக்கையில் வந்திருப்பது கலக்கத்தை அளித்தது. மேலும் தமது நாட்டில் தீய பிரச்சினைகள் எதுவும் ஏற்படவிடாமல் பார்த்துக் கொள்வது தான் சரியான நடைமுறையாக இருக்கும் எனவும் பாண்டிய மன்னர் கருதினான். அவர்களது கொள்கை பாண்டிய நாட்டு மக்களுக்கு ஏற்புடையது அன்று என்றும், அதனால் தமது நாட்டுப் பகுதியிலிருந்து அவர்களை வெளியேறிவிடும் படியாகவும் உத்திரவிட்டான். மன்னனது மறுப்பினை தூதுவர் மூலம் அறிந்த சுல்த்தான் அவர்கள் தமது முயற்சியில் மற்றுமொரு நடவடிக்கையாக மதுரை மன்னனை நேரே சந்தித்து தங்களது கோரிக்கையைப் பற்றி விபரமாக எடுத்துச் சொல்வதென உறுதி செய்தார்கள். இதனைத்