பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G2 நபிகள் நாயகம் வழியில் தொடர்ந்து மறுநாள் காலையில் சுல்த்தானும் அவரது குழுவினரின் ஒரு பகுதியினரும் மதுரை மாநகர் நோக்கிப் பயணமானார்கள். நகருக்குத் தெற்கே ஒரு கல் தொலைவில் அவர்களைத் தடுத்து நிறுத்திய பாண்டிய வீரர்கள் மன்னருக்கு தகவல் தெரிவித்து உத்தரவு கோரினர். மதுரைப் பாண்டியன் தனது நிலையினின்று மாறாமல். இஸ்லாமியக் குழுவினரைச் சந்திக்க மறுத்ததுடன் திரும்பிச் செல்லுமாறும், தவறினால் வன்முறையில் அவர்களை வெளியேற்ற வேண்டும் என அரசனது உத்தரவு இருந்தது. இதனை அறிந்த சுல்த்தான் அவர்கள் மன்னரது உத்தரவை மீறுவதென்றும், அமைதியான பிரச்சாரப் பணிக்கு ஏற்படும் இந்தத் தடங்களை எதிர்த்து மதுரை மாநகருக்குள் பிரவேசிப்பது என முடிவு செய்தார்கள். மறுநாள் காலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்த எஞ்சிய தொண்டர்களையும் வரவழைத்து தமது முழு அணியுடன் மதுரை நகருக்குள் பிரவேசிக்க முயற்சித்தார்கள். இந்த முயற்சி வன்முறையாக மாறியது. பாண்டிய வீரர்களும் சுல்த்தானது தொண்டர்களும் கை கலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதலைக் கேட்டறிந்த சுல்த்தான் அவர்கள் மிகவும் வேதனைப் பட்டார்கள். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து சன்மார்க்கப் பிரச்சாரத்தைச் செய்ய இயலாமல், மாறாக வன்முறையை சந்திக்க வேண்டிய தாயிற்றே என்பதே அவரது வேதனையாகும். அமைதியான ஏக இறைக் கொள்கை பற்றி பிரச்சாரம் செய்வதற்காக மட்டுமே வந்திருந்த தொண்டர்கள் வன் முறையைத் தடுப்பதற்காக அவர்களும் பாண்டிய வீரர்களுடன் வன் முறையில் ஈடுபட்டனர். அடுத்தடுத்த நாட்களில் இருதரப்பினரும் ஒருசிறிய போரினில் ஈடுபட்டனர். போரின் முடிவு இஸ்லாமியத் தொண்டர்களுக்கு சாதகமாகவே இருந்தது. ஏற்கனவே சிந்துப்பகுதி, குஜராத், கேரளக்கரை, திருநெல்வேலிப் பகுதி ஆகிய இடங்களில் எல்லாம் ஆங்காங்குள்ள மக்களுடன் இணக்கமான முறையில் இஸ்லாமியக் கொள்கையினை எடுத்து இயம்பிய அந்தத் தொண்டர் களுக்கு, மதுரைக் கோட்டை அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக