பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 63 அமைந்திருந்தது. சுல்த்தான் அவர்களது தொண்டர்கள் பாண்டிய வீரர்களது எதிர்ப்பை முறியடித்துக் கோட்டைக்குள் புகுந்த பிறகும் பாண்டியரது வீரர்கள் அவர்களது முன்னேற்றத்தைத் தடுக்கும் வழிகளில் போராடினர் என்றாலும், இறை உணர்வுடன் இறைவனது மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற குறிக்கோளில் அவர்கள் மிகுந்த ஆக்ரோசத்துடன் பாண்டிய வீரர்களை வெற்றி கண்டனர். கோட்டைக்குள் இருந்த பாண்டியன் தமது குடும்பத்தினருடன் கோட்டையின் வடக்கு வாசல் வழியாக சோழ நாட்டிற்கு உயிர் தப்பி ஒடினான். இதைத் தவிர அப்போது பாண்டியனுக்கு வேறு வழி யில்லை. இப்போது சுல்த்தான் அவர்களது தொண்டர்கள் மதுரை மாநகர மக்களிடம் ஏக இறைக் கொள்கையைத் தெளிவாக எடுத்துச் சொல்லினர். அதில் ஓரளவு எதிர்பார்த்த வெற்றியையும் எய்தினர். அடுத்து என்ன செய்ய வேண்டும்? சுல்த்தான் அவர்கள் தமது தளபதியான இஸ்கந்தரையும் ஏனைய முக்கிய அணித்தலைவர்களையும் வரவழைத்து ஆலோசனை நடத்தினார்கள். மதுரை மாநகரில் இயல்பான வாழ்க்கை நிலையை ஏற்படுத்திவிட்டதால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணியைப் பற்றி ஆய்வு செய்தனர். முடிவு கோட்டைப் பொறுப்பை தளபதி இஸ்கந்தரிடம் ஒப்படைத்துவிட்டு தென்கிழக்காகக் கடற்கரைப் பகுதிக்குச் சென்று, பாண்டியனது இளவலான விக்கிரமபாண்டியனைச் சந்தித்துப் பேசுவது என முடிவு செய்தார்கள். o