பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் – 9 கிழக்குப் பகுதியில் இஸ்லாம் பெளத்திர மாணிக்கப்பட்டினம் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையில் கீழக்கரை. வேதாளை ஆகிய இரு ஊர்களுக்கு இடையே கடற்கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. அதன் இன்றைய பெயர் பெரியபட்டனம் ஆகும். கி.பி. 15 - ஆம் நூற்றாண்டு வரை மிகச் சிறந்த பாண்டிய நாட்டு துறைமுகங்களில் ஒன்றாக விளங்கி வந்தது. பெளத்திர மாணிக்கம் என்பது பவித்திர மாணிக்கம் என்ற வடசொல்லின் திரிபு ஆகும். காக பேதம் போன்ற எண்வகை குற்றங்கள் நீங்கிய நல்ல மாணிக்கம் என்பது தான் இதன் பொருள். வெவ்வேறு காலங்களில் வளமையிலும் வணிகச் செழுமையிலும் சிறந்திருந்த பட்டிணங் களைக் குறிப்பதற்காக இந்தச் சொல் வழக்குப் பெற்றுள்ளது. ஒரு காலத்தில் கொற்கை நகரமும் இன்னொரு காலத்தில் தொண்டியும் பவித்திர மாணிக்கம் என்ற பெயரால் வழங்கப்பட்டிருப்பதை அந்த ஊர்களில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இராமநாதபுரம் பகுதியில் அமைந்திருந்த இந்த பவித்திர மாணிக்கப் பட்டிணத்தைப் பற்றிய கல்வெட்டு ஒன்று திருப்புல்லாணி திருக்கோயிலில் காணப்படுகிறது. இந்த கல்வெட்டினைப் பொறித்தவன் எம்மண்டலமுங் கொண்டான் என்ற சிறப்புப் பெயருக்குரிய மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆவான் (கி.பி. 1216 - 1232) அந்தக் கல்வெட்டின் வாசகம் கீழ்ச்