பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் Յ5 செம்பி நாட்டு பவித்திர மாணிக்கப் பட்டிணத்தின் கீழ்பால் உள்ள பிலார் பள்ளியான சோனக சாமந்த பள்ளிக்கு இறையிலியாக ஆம்புத்துர் முதலிய கிராமங்கள் வழங்கப்பட்டதை தெரிவிக்கின்றது." இந்தக் கல்வெட்டுப் பொறிப்பதற்கு முன்னரே கி.பி. 12 - ஆம் நூற்றாண்டில் இந்த ஊர் பராக்கிரம பட்டிணம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வந்தது. மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு கி.பி. 1166 வரை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டியனது பெயரால் இந்த ஊர் வழங்கி வந்தது. சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் அப்பொழுது பராக்கிரம பட்டிணம் என வழங்கப்பட்ட பவித்திர மாணிக்க பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த விக்கிரம பாண்டியனுக்கு தூதுக்குழு ஒன்றினை அனுப்பி வைத்தார்கள். கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்காக அந்தப் பாண்டிய மன்னனது அனுமதியைக் கோரி அந்தக் குழு அங்கு அனுப்பப்பட்டது. அந்தத் தூதுக் குழுவினர் விக்கிரம பாண்டியனைச் சந்தித்து தங்களது தலைவரான சுல்த்தான் செய்யது இபுராஹிம், அரபு நாட்டில் கி.பி. 7 - ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் என்ற புதிய சமயத்தைத் தோற்றுவித்த முகமது நபிகள் அவர்களது வழியில் வந்தவர் என்றும் மதினப் பகுதியின் மன்னர் என்றும் தெரிவித்தார்கள். அதற்கு முந்தைய ஐநூறு ஆண்டுகளில் ஏகதெய்வ கொள்கையினை வலி யுறுத்தும் இஸ்லாம் என்ற புதிய சமய நெறியை இந்திய நாட்டிற்கு மேற்கே உள்ள பாரசீகம், துருக்கி, சிரியா, பாலஸ்தீனம் ஆகிய மேற்கு ஆசிய நாடுகளிலும், எத்தியோபியா, சூடான், எகிப்து, துனிவடியா, மொராக்கோ, அல்ஜியஸ் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவலாக மக்களால் பின்பற்றப்படுகிறது என்பதை 1 திருப்புல்வாணிக் கல்வெட்டு A.R.No. ந. - 5