பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՅ நபிகள் நாயகம் வழியில் அந்தத் தூதுக்குழு பாண்டியனுக்குத் தெரிவித்தது. ஏற்கனவே பாண்டிய நாட்டிற்கும் அரேபிய நாட்டிற்கும் இடையில் வாணிபம் வளர்ந்து வந்திருப்பதைப் போன்று பாண்டிய நாட்டில் ஏக தெய்வக் கொள்கையான இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து மக்களை இறைவனது வழியில் அணி திரளுமாறு செய்வதே எங்கள் தலைவரது நோக்கம் என்பதைத் தெரிவித்ததுடன் விக்கிரம பாண்டியனது ஆட்சியில் அமைந்த பகுதிகளில் அமைதியாக இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய அனுமதியும் கோரினர். தமது நாட்டுக் குடிமக்கள் நல்ல முறையில் சிவனிய கொள்கையினைப் பின்பற்றி வருபவர் என்றும் அவர்களுக்கு வேறு புதிய சமய நெறி தேவையில்லை என்றும் ஆதலால் அந்தக் குழு வினரும் அவரது தலைவரும் பாண்டிய நாட்டைவிட்டு அகன்று விடுமாறும், தவறினால் வன்முறையில் அவர்கள் வெளியேற்றப் படுவர் என்றும் பாண்டியன் தெரிவித்துவிட்டான். ஏமாற்றமுற்ற தூதுக் குழுவினர் மதுரைக்குத் திரும்பி செய்தியை சுல்த்தான் செய்து இபுராகிம் அவர்களுக்குத் தெரிவித்தனர். சுல்த்தான் அவர்கள் தமது நண்பர்களுடன் நீண்ட ஆலோசனை செய்த பிறகு விக்கிரம பாண்டியனது ஆட்சிப் பகுதியில் இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொள்ளுவது என்றும், பாண்டியன் எதிர்ப்பையும் வன்முறையையும் தமது தொண்டர்கள் மீது பயன்படுத்தினால் தாமும் அந்த வன்முறையைச் சந்திப்ப தென்று முடிவு செய்தார்கள். சில நாட்களில் தமது குழுவினருடன் சுல்த்தான் அவர்கள் கிழக்கு இராமநாதபுரம் பகுதிக்குப் புறப்பட ஆயத்தமானார்கள். ஏற்கனவே காயல் பட்டினத்தில் முகாமிட்டிருந்த அவர்களது தொண்டரணியும் இராமநாதபுரம் பகுதிக்கு மதுரை அணியினருடன் வந்து சேர்ந்து கொண்டனர். எதிர்பார்த்தப்படியே விக்கிரம பாண்டியனது படைகள் சுல்த்தான் அவர்களது தொண்டர் படையுடன் பொருதின. பல இடங்களில் போர் உக்கிரமாக நடைபெற்றது. பத்து நாட்கள்