பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՑ நபிகள் நாயகம் வழியில் ஏற்படுத்தினர். ஒரிறைக் கொள்கை இம்மை, மறுமையின் அதிபதியான இறைவனை உறுதியுடன் நம்பி ஒழுகுவது, மக்கள் அனைவரிடமும் அன்பு கொண்டு சகோதரர்களாக மதித்து நடத்துதல், நாள்தோறும் ஐந்து வேளைத் தொழுகையில் ஈடுபட்டு மன அமைதி பெறுதல், போன்ற புதிய நிலைப்பாடுகளினால் ஈர்க்கப்பட்ட மக்கள், சுல்தான் செய்யது இபுராகிம் அவர்கள் திரு முன்னர் இஸ்லாத்தை ஏற்று உலகமெங்கும் பரவியுள்ள இஸ்லாமிய மக்களது சகோதரர்களாக மாறினர். இந்த மக்களது மனப் போக்கிலும் வாழ்க்கை நெறியிலும் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டது. இதனால் அதுவரை பல குழப்பங்களினாலும் போர்களினாலும் அவதியுற்று வந்த அவர்களுக்கு அமைதியாகவும் ஆறுதலாகவும் வாழத்தக்க சூழ்நிலை எழுந்தது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் நடைபெற்ற சுல்தான் செய்யது இபுராகிமின் நல்லாட்சியினை உணர்ந்த குடிமக்கள் பலர் புதிய சமயமாகிய இஸ்லாத்தை நாளடைவில் ஏற்று வாழ்ந்து வந்தனர். வடக்கே சுந்தரபாண்டியன் பட்டணத்திலிருந்து மச்சூர், தொண்டி, மங்கலக்குடி, அஞ்சுக்கோட்டை நம்புதாழை, திருப்பாலக்குடி, இராஜசிங்க மங்கலம், அழகன்குளம், ஆற்றாங்கரை, வேதாளை, சிக்கல், முதுகுளத்தூர் ஆகிய ஊர்களிளெல்லாம் முஸ்லீம்கள் பரவலாக வாழ்ந்து வரத் தொடங்கினர். சுல்த்தான் செய்யது இபுராஹிம் அவர்கள் இந்த மக்களுக் காகப் பல புதிய வழிபாட்டுத் தலங்களை நிறுவியதுடன், நமது மக்கள் இறைவனுக்கு அஞ்சியவர்களாகவும் நல்ல முஸ்லீம்களாக வும் நேர்வழியில் வாழத்தக்க சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் வரை பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த சோனகன் பேட்டை, பாசிப்பட்டிணம், தொண்டி, சோழியக்குடி, தேவிபட்டனம், ஆற்றாங்கரை, அழகன் குளம், காயல்பட்டிணம் ஆகிய ஊர்களுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த சில அரபு நாட்டு முஸ்லிம்கள் மட்டும்தான் அங்கும் இங்குமாக காணப்பட்டனர். ஆனால் இப்பொழுது பாண்டிய