பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 69 நாட்டின் கிழக்குப் பகுதியில் மக்கள் தொகையில் கணிசமான அளவிற்கு புதிய முஸ்லீம்களின் நடமாட்டம் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அரபியரது வழிகாட்டுதலினால் இந்த மக்கள் கடலோர நாடுகளுடனும் கடலுக்கு அப்பால் உள்ள கிழக்கு ஆசிய நாடுகளுடனும் வியாபாரத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். பாரம்பரியத் தொழில்களான சங்கு எடுத்தல். முத்துக் குளித்தல், அம்பர் சேகரித்தல் ஆகிய கடல்படு தொழில் களில் புதிய உத்திகளையும் தெரிந்து பின்பற்றலாயினர். அமைதியும், இறைவனது கருணையும் இணைந்து எழுந்த இந்தப் புதிய சூழ்நிலையில் பாண்டியநாட்டு மக்கள் சிறப்பாக முன்னேற்றப் பாதையில் நடந்து வந்தனர். சுல்தான் செய்யது இபுராகிம் அவர்களது ஷரிஅத் ஆட்சி அவர்களுக்கு பக்க பலமாகவும் வழிகாட்டியாகவும் இருந்து வந்தது. இவர்களது வணிகத்திற்கு உதவுவதற்காக சுல்தான் அவர்கள் சில புதிய நாணய வகைகளையும் பாண்டிய நாட்டு செலாவணியில் சேர்த்தார்கள். செம்பு, பொன் ஆகிய கனிமங்களில் அச்சடிக்கப்பட்ட சுல்தான் அவர்களது நாணயங்கள் சில கிடைத்துள்ளன. அவைகளில் சுல்தான் செய்யது இபுராஹிம் அவர்களது தந்தையான செய்யது அகமது என்ற பெயரும் சேர்க்கப்பட்டு சுல்தான் செய்யது இபுராகிம் பின் செய்யது அகமது என பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். ஏற்கனவே பாண்டிய நாட்டின் செலாவணியில் இருந்த தினாரா (தினார்) திரம்ம (திர்ஹம்) என்ற அரபு நாட்டுப் பொன். வெள்ளி நாணயங்களுடன் சுல்தான் அவர்களது நாணயங்களும் செலாவணியில் இருந்து வந்தன. டாக்டர் அப்பாத்துரையார் தமது நூலில் பாண்டிய நாட்டில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை அரபு நாட்டு நாணயங்களான தினார். திர்ஹம் செலாவணியில் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார் தினாரா என்ற அரபு நாட்டுத் தங்க நாணயம் கி.பி. 8 - ஆம் நூற்றாண்டு முதல் சேதுநாட்டுச் செலவாணியில் 1. Appadurai. Dr. - Economic Conditions of Tamil Nadu (1100 AD - 1300 AD)