பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 Ο நபிகள் நாயகம் வழியில் இருந்ததைத் திருப்பத்துார் கல்வெட்டு ஒன்று தெளிவாகக் குறிப் பிடுகிறது. பார்ப்பனப் பெண்மணி ஒருத்தி திருப்பத்துர் திருத்தலி யாண்ட நாயனாருக்கு வழிபாடு செய்ய இரண்டு தினார்களை வழங்கினார் என்பதுதான் அந்தச் செய்தி. அவைகளின் ஒரு பகுதியே சுல்தான் செய்யது இபுராகிம் அவர்களது நாணயங்களாகக் கொள்ளலாம்.' மேலும் புதிய குடிமக்களது பயன்பாட்டிற்கென சுல்தான் அவர்கள் பல புதிய பள்ளிவாசல்களையும் நிர்மானித்தார்கள். முஸ்லீம் மக்களிடையே ஒற்றுமையையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் குறிப்பிடும் ஐந்து வேளை தொழுகைகளில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சுல்த்தான் அவர்கள் நிர்மானித்த பள்ளிவாசல்களில் ஒன்று இன்றும் பவித்திர மாணிக்கப் பட்டிணம் என வழங்கப் பெற்ற இன்றைய பெரிய பட்டினத்தில் காணலாம். இந்தப் பள்ளி முழுமையும் வாயில், துண்கள், மிம்பர் மேடை, கூரை சாளரங்கள் ஆகியவை முழுவதும் கல்லினால் உருவாக்கப்பட்டுள்ளன. இது கல்லுப் பள்ளி எனவும் ஜமால் ஜலால் பள்ளி எனவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பராமரிப்புச் செலவிற்காகத்தான் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1232) அம்பத்துர் முதலான ஊர்களை சர்வமானியமாக வழங்கியிருந்ததை அந்த மன்னனது திருப்புல்லாணி கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்தக் கல்வெட்டில் இந்த பள்ளிவாசல் 'பிலார் பள்ளியான சோனக சாமந்தப்பள்ளி' என குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது. சோனகர் என்ற சொல்லுக்கு அரபு நாட்டவர் என்றும் சாமந்தப் பள்ளி என்பது அரபித் தலைவன் என்றும் பொருளாகும். சுல்தான் அவர்களது ஆட்சிக் காலத்திற்கு நூற்றைம்பது ஆண்டுகட்குப் பின்னர் இந்தப் பள்ளிக்கு வருகை தந்த துனிவிய நாட்டைச் சேர்ந்த உலகப் பயணியான இபுனு பதுதா என்பவர் இந்தப் பள்ளியையும் இந்தப் பள்ளி அமைந்துள்ள பெரிய பட்டிணத்தைப் பற்றியும் தமது பயணக் குறிப்புகளில் பதிவு 1. திருப்புத்துர் கல்வெட்டு A.R.No