பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 71 செய்துள்ளார். கால நீட்சியில் சுல்தான் அவர்களது செம்மையான ஆட்சி பற்றிய ஆவணங்கள் மறைந்துவிட்டன. இதனால் தமிழக வரலாற்றில் நுனிப் புல் மேய்ந்தது போன்ற நிகழ்ச்சிகளை மட்டும் அங்குமிங்குமாக வரைந்த நூலாசிரியர்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த சுல்தான் அவர்களது ஆட்சியைப் பற்றி ஒரு சிறிய குறிப்புக் கூட வரைவதற்குத் தவறிவிட்டனர். இந்த நூலாசிரியர்களுக்கு விலக்காக டாக்கா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவரும் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட வருமான வரலாற்று ஆசிரியர் டாக்டர். எஸ்.ஏ.க்யு ஹீசைனி என்பவர் மட்டும் சுல்தான் அவர்களது ஆட்சி பற்றியும் அவரது ஆட்சி நிலவிய பகுதி வைப்பாறுக்கும் வைகையாற்றுக்கும் கடலுக் கும் இடைப்பட்ட ஒரு முக்கோண வடிவிலான பகுதி என்றும், தமது வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார் சுல்தான் அவர்களது ஆட்சியை வேறு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடாத இருட்டடிப்புக்குப் பின்னணி எது என்பது புரியவில்லை. தமிழக வரலாற்றில் இந்தக் கால கட்டத்திற்கு முன்னரும் இருட்டடிப்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. குறிப்பாக சங்க காலத்தை அடுத்த கி.பி. 3 - ஆம் நூற்றாண்டு முதல் 6 - ஆம் நூற்றாண்டு வரையான கால வரையறையில் தமிழகத்தில் நிலவிய ஆட்சி, ஆட்சியாளர்கள், படைக்கப்பட்டுள்ள இலக்கியங்கள் ஆகியன பற்றிய செய்திகள் எதுவும் இல்லாததால் இந்தக் காலவரையறை இருண்ட காலம் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இதனையடுத்து பாண்டியநாட்டு ஆட்சியாளரைப் பற்றிய கி.பி. 8.9.10 - ஆம் நூற்றாண்டுகளுக்கான தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை. எது எப்படி இருப்பினும் இஸ்லாமிய இலக்கியங்களும் இஸ்லாமிய வரலாறும் சுல்த்தான் அவர்களைப் பற்றிய செய்திகளை விவரமாகத் தந்துள்ளன. + *్మ* 1. Neelakanda Shastri K.A. - Foreign Notices of South India (1948) 2. Hussaini Dr. S.A.Q.- A History of Pandiya Kingdom (1962)