பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 10 இறுதிப்போர் சுல்தான் அவர்களது ஆட்சியில் மக்கள் அமைதியாக இயல் பான வாழ்க்கை நிலைகளில் ஈடுபட்டு நாட்டிற்கு வளம் சேர்க்கும் வழிகளில் முனைந்து இருந்தனர். அரபு நாட்டிலிருந்தும், பாரசீகம், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் இஸ்லாமியப் பணிக்காகச் சுல்த்தான் அவர்களைத் தொடர்ந்து வந்த ஏராளமான தொண்டர்கள் சுல்த்தான் அவர்களது அனுமதியுடன் தங்களது தாயகங்களுக்குத் திரும்பிச் சென்றனர். சுல்த்தான் அவர்களது குடும்ப வாழ்க்கையிலும் குறிப் பான இரு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விக்கிரம பாண்டியனுடன் மேற் கொண்ட போரில் சுல்த்தான் அவர்களது உடன்பிறவாச் சகோதரரான இஸ்மாயில் ஷகிதானார் (தியாகியானார்). அவரது மகன் இஸ்காக்குக்கும் சுல்த்தான் அவர்களது தங்கை மகளான செல்வி ஜைனதுக்கும் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. இதனையடுத்த சில நாட்களில் சுல்த்தான் அவர்களது தாயார் காலமானார். இதனால் சோர்ந்து போயிருந்த சுல்த்தானுக்குக் கவலையளிக்கக் கூடிய மற்றுமொரு செய்தி காத்திருந்தது. அது தான் பத்தாண்டுகளுக்கு முன்னர் சுல்த்தானுடன் பொருதி மாண்டு போன விக்கிரம பாண்டியனின் இளவல் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான் என்பது ஆகும்.