பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 73 சுல்த்தான் அவர்கள் நிலை நிறுத்திய புதிய இஸ்லாமிய ஆட்சிக்கு மிகப் பெரிய ஆபத்து அல்லவா ஏற்பட்டுவிட்டது. அவர்களது வசம் அப்பொழுது இருந்தது மிகக் குறைவான படைதான் என்றாலும் எதிரியை எதிர்த்துப் போராட ஆயத்தமானார்கள். அந்தக் குழம்பிய மன நிலையில், அவர்களது பாட்டனார் சங்கைக்குரிய நபிகள் நாயகம் அவர்களது கால நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வந்தது. அதுதான் பத்ருப்போரை நபிகள் நாயகம் அவர்கள் முன் நடத்திச் சென்று வெற்றிகண்டது ஆகும். ஹிஜ்ரி 2-வது ஆண்டில் மக்கத்திலிருந்து மதீனா போய் சேர்ந்த அண்ணல் அவர்களை மக்கத்து குரைஷிகள் வலுச்சண்டைக்கு அழைத்து மதீனா வாசிகளையும், நபிகள் நாயகத்தையும் துன்புறுத்து வதற்காகச் செய்த சூழ்ச்சியே பத்ருப்போராகும். மக்காவில் இருந்து ஷாம் நாட்டுக்குச் செல்லும் பாதையில் அடிக்கடி குரைஷிகளது ஒட்டகச்சாத்துக்களை மதீனாவாசிகள் கொள்ளையடிப்பதைத் தடுக்க போர் தொடுப்பதாக நாயகம் அவர்களுக்கு மக்கததுக்குரைஷிகள் ஒலை அனுப்பினர். அப்பொழுது அந்த வருடம் ரமலான் நோன்பு ஆரம்பித்த 17-வது நாளாகும். மதீனத்து அன்சாரிகள் அனைவரும் நபிகள் நாயகம் உட்பட ரமலான் நோன்பு மேற்கொண்டிருந்தனர் என்றாலும் பொய்யான காரணத்தைக் கற்பித்து போர்முரசு கொட்டுவதை எதிர்ப்பதென முடிவு செய்யப்பட்டது. மதீனத்துக்குத் தெற்கே சிறிது தூரத்தில் பத்ரு எனுமிடத்தில் குழுமியிருந்த குரைஷிப்படைகளை முறியடிப்பதற்காக, நபிகள் நாயகம் அவர்கள் தலைமையில் 313 முஸ்லீம்கள் மட்டும் திரண்டு சென்றனர். குரைஷிகளது படைப் பெருக்கத்தைக்கண்ட மதீனத்து அன்சாரிகள் முதலில் தயங்கியபடி கலக்கமடைந்தனர். பயப்பட வேண்டாம். இறைவன் நமது பக்கத்தில் இருக்கிறான் என்ற நபிகள் நாயகம் அவர்கள் தைரியம் சொன்னதும் அன்சாரிகள், குரைஷிகளை வீராவேசமாகத் தாக்கி அழித்தனர். அரபு