பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதாரணமாக ஒன்றிரண்டு மட்டும் இதோ, “கார்காலத்தில் கொழுத்த மீன்களைப் பிடித்துத் தின்பதற்காகப் புறப்படும் நாரைக் கூட்டம்போல அந்தத்தோணிகள் வரிசையாக அணிவகுத்துச் சென்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. "விண்ணை மறைத்து வளர்ந்து வரிசையாக நிற்கும் தென்னை மரங்கள் அந்தக்குழுவினருக்கு வரவேற்பு நல்குவதைப்போல் மாலைக்காற்றில் அசைந்துகாணப்பட்டன” போன்றவற்றைக்குறிப்பிடலாம். இந்நூலின் பயன்மிகுந்த மற்றொரு விஷயம், ஹிஜ்ரி ஆண்டின் தேதிக்கு ஆங்கிலத்தேதிகள் அறியவும் ஆங்கிலத்தேதிகளுக்குச் சரியான ஹிஜ்ரி தேதிகளை கண்டறியும் முறைமைகளுக்கான தகவல் களஞ்சியமே இதில் இணைக்கப்பட்டிருப்பதுதான். வரலாற்றின் ஆதார வரிசையில் மரபுக்கவிதைகளின் பங்களிப்பு பிரதான அடிப்படையாக மதிக்கப்படுவதுண்டு. இந்த வகையில் கீழக்கரை டவுன் காஜி அவர்களால் பாடப்பெற்ற கவிதைகள் இதனை நிறைவேற்றியிருக்கிறது. சுல்த்தான் ஸய்யித் இப்ராஹீம் அவர்களின் வரலாற்றில் ஒன்றித்து வாசித்தபடி, அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கையில் “பாண்டியனால் வெட்டப்பட்ட சுல்த்தான் அவர்கள் வீர மரணம் எய்தினார்கள், மனிதகுலத்தில் மகத்தான இறைத்துதராகவும் ஏகத்துவநெறி உலகெங்கும் பரவுவதற்கு அயராது பாடுபட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பேரனாரும், பாலைவனச் சோலையான அரபு நாட்டு மதினா மாநகரில் மலர்ந்த பாரிஜாத மலரான செய்யது இப்ராஹீம்