பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏர்வாடி செப்புப் பட்டயத்திற்கான விளக்கவுரை இந்தப் பட்டயத்தினை ஏர்வாடி தர்ஹாவிற்குப் பள்ளிவாசல் தர்மமாக சர்வ மானியமாக வழங்கியவர் கட்டையத் தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி ஆவார். இவர் சேதுநாட்டை கி.பி. 1728 முதல் கி.பி. 1745 வரை செம்மையான ஆட்சி நடத்தியவர். இந்த மன்னருக்குச் சிறப்பு பெயராக அமைந்துள்ள 101 விருதா வளிகள் இந்தப் பட்டயத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டயம் ஏர்வாடி பள்ளிவாசல் முசாபர் நல்ல இபுராஹிமுக்கு 1.11.1742 அன்று ஏர்வாடியை அடுத்துள்ள மாயாகுளம் கிராமம் வழங்கப்பட்டது. இந்தப் பட்டயத்தின் வரி 35 - இல் காணப்பட்டதாக உள்ளது. இந்த பட்டயத்தில் அறக்கொடையாக வழங்கப்பட்டுள்ள மாயாகுளம் கிராமத்திற்கான பெரு நான்கு எல்லைகளும், அதற்குள் கட்டுப்பட்ட நஞ்சை புஞ்சை நிலங்களின் விவரமும் இதில் காணப்படுகின்றன. மேலும் அத்துடன் மாயாகுளம் கிராமத்திலிருந்து சேதுபதி மன்னருக்கு அரச இறையாகச் செலுத்தப்பட்டு வந்த உலுப்பை, வைக்கோல் கட்டுவரி, ஆயக்கட்டுவரி, உம்பளம், மாட்டு வரி, நிலவரி, பலவரி, பறைவரி, கம்பளவரி, முள்ளுவரி, காணிக்கைவரி உப்பளவரி, சம்மாடம், சத்தவரி ஆகிய வரிகளுடன் புதிதாக வரிவிதிப்பு இருப்பினும் அவையும் ஏர்வாடி பள்ளி வாசலுக்குச் சேர வேண்டும் என்பது சேதுபதி மன்னரது கட்டளை.