பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ց6 நபிகள் நாயகம் வழியில் பட்டயங்களில் பொதுவாக இத்தகைய தர்மங்களைப் பேணிக் காத்தவருக்கும் தர்மத்திற்கு அகிதம் பன்னியவருக்கும் கிடைக்கும் பலன்களைக் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இந்தப் பட்டயத்தில் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிகளில் (64 வரி - 67 வரி) இஸ்லாமிய முறைப்படியான சொற்றொடர் அமைக்கப்பட்டி ருப்பது ஒரு புதுமையானதாகும். 'யாதாமொரு இசுலாமானவர்களில் பரிபாலனம் பண்ணினார்கள் கோடி அடிமை கொண்டு உரிமைக்கு விட்ட பலனும் கோடி ஹஜ்ஜி செய்த பயனுடையவாராகவும் இந்த தற்மத்துக்கு விகாரம் பன்னினவர்கள் மாதா பிதா உஸ்தாதை வதை பண்ணிவீச்சு மக்கத்துப் பள் ளியை இடித்த பாவத்திலே போவாராகவும்' இந்தப் பட்டயத்தில் காணப்படும் புஞ்சை நிலங்களில் பகுப்புப் பெயர்களும் இந்த வட்டார வழக்கிற்குப் பயன்படுபவன வாகும். எடுத்துக்காட்டாக தட்டு, புஞ்சைக்காடு, மணக்காடு, முந்தல் என்பன. செய்யது இபுராகிம் அவர்களது அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் அறிந்த சேதுபதி மன்னர் கட்டயத் தேவர் என்ற குமார முத்து விஜயரகுநாத சேதுபதி அவர்கள் பின்னர் ஏர்வாடியில் அமைந்துள்ள சுல்த்தான் செய்யது இபுராகீம் ஷகீது அவர்களது நினைவிடமாகிய ஏர்வாடி தர்ஹாவிற்கு, ஏர்வாடிக்கு அன்மையி லுள்ள மாயாகுளம் என்ற கிராமத்தைச் சர்வமானியமாக கி.பி. 1742-ல் வழங்கி உதவினர். அந்தச் செப்பேட்டின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சுல்த்தான் அவர்களுடன் வீரப் போரிட்டு ஷகீதான (தியாகியான) வீரர்கள், தளபதிகள் 1) கமால் எஸ்.எம். டாக்டர் - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)