பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 87 ஆகியோர்களுடன் சுல்தானது பொன்னுடலையும் தாங்கிய பூமிதான் இன்றைய ஏர்வாடி அல்லது ஏறுபதி என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏர்வாடி என்ற சொல் வழக்கிற்குச் சரியான பொருள் கிடைக்கவில்லை. இது தமிழ்ச்சொல்லும் அல்ல. சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது தாயகமான மதின மாநகரின் ஒரு பகுதியத்ரீப் என வழங்கப்பட்டதாகவும் அந்தப் பெயரிலேயே சகீது அவர்களது தியாக பூமியும் பெயரிடப்பட்டு நாளடைவில் யத்ரிப், ஏர்வாடியாக மருவியிருப்பதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த இடம் சுல்தான் அவர்கள் ஆட்சி செய்த பெளத்திர மாணிக்க பட்டிணத்திற்கு தெற்கே 20 கல் தொலைவில் கடற்கரையில் உள்ளது. இந்தப் பகுதியை இன்றைய ஏர்வாடியின் தர்ஹா, காட்டுப் பள்ளிவாசல் என்ற பகுதிகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த இரு இடங்களிலும் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான மண்ணறைகள் (புதைகுழிகள்) கி.பி. 11.98 - இல் இந்தப் பகுதியில் நடைபெற்ற சுல்தான் செய்யது இபுராஹிம் அவர்களது வீரப்போரினையும் அவர்களது தியாகத்தையும் என்றும் நம் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதாக இருக்கின்றன. இந்தக் கல்லறைகளில் இனம் தெரிந்த தியாகிகளின் பட்டியலை கீழே கொடுத்திருக்கிறோம். 1) சுல்தான் அவர்களது துணைவியார் செய்யது அலி பாத்திமா 2) சுல்தான் அவர்களது திருமகனார் செய்யது அபுத்தாஹிர் 3) சுல்தான் அவர்களது தங்கை செய்யது ராபியா 4) மைத்துனர் செய்யிது ஜெய்னுலாபிதின் 5) தளகர்த்தர் ஷம்சுத்தின் 6) கமருத்தீன்