பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் ՑՅ பெற்றுள்ள வீரப்பெருமக்கள், சுஹதாக்கள் ஸாலிஹீன்கள் ஆகி யோரைப் பற்றிய விவரங்களும் அவர்களது தியாகச் செயல்களும் நமக்குக் கிடைக்கவில்லை. தமிழக வரலாறும் இவர்களைப் பற்றியும் இவர்களது தியாகப் போர் பற்றியும் ஒரு சிறிய குறிப்பினைக் கூட தந்து உதவவில்லை. இந்தத் தியாகச் செம்மல்களையும் சுல்தான் அவர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நின்று பாண்டிய நாட்டில் புதிதாக நிறுவப்பட்ட ஷரி-அத் ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக இறை வனது பாதையில் முஜாகிதீன்களான இந்தப் பெருமக்களைப் பற்றிப் பிற்காலங்களில் இந்தப் பகுதிக்கு வருகை வந்த அரபு நாட்டு நூலாசிரியர்களான யாக்குபு, டிமிஸ்க்கி (கி.பி. 1325), அபுல்பிதா (கி.பி. 1273 - 1331),இபுனு பதுதா (கி.பி. 1355) போன்றவர்களும் தங்களது பயணக் குறிப்புகளில் ஒருவர் கூட குறிப்பிடாதது வேதனைக்குரியதாகும். †