பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 11 முஸ்லீம் சமய முன்னோடிகளில் முதன்வர் தமிழ் நாட்டிற்கு வடமேற்கேயுள்ள அரபு நாட்டில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் ஓரிறைக் கொள்கையை உணர்த்துவதற்காக முகம்மது நபி ஸல்லலாகு அவர்களை இறைவன் தனது இறுதித் தூதராக ஏற்று அவருக்கு வேத வெளிப்பாடுகளை அறிவித்தான். இறை யாணையை இதயத்தில் ஏற்றவராக நபிகள் நாயகம் அவர்கள் தமது எஞ்சிய 20 ஆண்டு கால வாழ்வினை இருண்ட உலகம் எனக் கருதப்பட்ட அன்றைய அரபு மக்களிடையே ஏக இறைக் கொள்கையை போதனை செய்து வந்ததுடன் அவர்களை ஆழ்த்தியிருந்த அஞ்ஞான செயல்களிலிருந்து விடுபடுமாறும் பிரச்சாரம் செய்து வந்தார். அன்னாரது பிரச்சாரத்திற்குப் போதிய ஆதரவு கிடைக்கப் பெறாததுடன் அவர்களது உயிருக்கு உலைவைக்க குரைஷி கூட்டத் தினர் முடிவு செய்ததால் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்தகமாகிய மக்கமாநகரை விட்டு மதின மாநகர் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களது சமயப் பணிக்குப் பேராதரவு எய்திய நிலையில் அங்கேயே காலமானர்கள். 'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயுன்' நபிகள் நாயகத்திற்குப் பிறகு அவரது