பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 91 சஹாபாக்களான நான்கு கலிபாக்கள் - 1) அபு பக்கர் சித்திக் 2) உமர் கத்தாப் 3) உதுமான் 4) அலி - ஆகியோர் பொறுப்பி லிருந்தாலும் அவர்கள் இறைவனது திருமறையையும் நபிகள் நாயகம் அவர்களது போதனைகளையும் பரப்பும் பணியில் ஈடுபடவில்லை. இவர்களில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் ஒரே ஒருவர் மட்டும் இஸ்லாமிய சமயப் பணிக்காக அரபு நாட்டிலிருந்து தென்கிழக்கே கேரளக் கரைக்கு வந்தார். அவரைப் பற்றிய செய்திகளை இப்பொழுது பார்ப்போம். வரலாற்று ஆவணங்களின்படி கேரளத்தின் கரையோர நகராகிய கொல்லங்கோட்டிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னன் கி.பி. 825-இல் அரபு நாடு சென்று மக்கா, மதீனா நகர்களுக்கு விஜயம் செய்து இஸ்லாத்தை ஏற்றவராக அப்துல் ரஹ்மான் சாமிரி என்ற பெயருடன் கேரளத்திற்குத் திரும்புவதாக இருந்தார். வழியில் அரபு நாட்டின் தெற்கே உள்ள துறைமுகமாகிய சபர் பட்டினம் போய்ச் சேர்ந்த பொழுது அவர் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் நோயினின்றும் விடுபடாத நிலையில் கேரளத்திற்கு மாலிக் இபுனுதினார் என்பவரை அறிமுக மடல்களுடன் அனுப்பி வைத்தார். அவர் சேரமான் பெருமானது அறிமுக கடிதத்தினைக் கோழிக்கோடு, வேணாடு மன்னர்களிடம் சேர்ப்பித்தார். அவர்களது ஆதரவுடன் கேரளத்தில் இஸ்லாமியச் சமயப் பிரச்சாரத்தை நடத்தியதுடன் 8 நகர்களில் முஸ்லீம்களுக்கான தொழுகைப் பள்ளிகளையும் நிறுவினார். நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின்படி அரபு நாட்டிலிருந்து நபிகள் நாயகம் மறைவிற்குப் பிறகு தென்னாட்டிற்கு வந்த முதலாவது இஸ்லாமிய பிரச்சாரகர் மாலிக் இபுனு தினார் 1) Hussain Nainar Dr. - Arab geographers knowledge about south India (1944)