பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நபிகள் நாயகம் வழியில் மட்டுமே என்பது உறுதியாகிறது. ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் மறைந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரபு நாட்டிலிருந்து பாரசீகம் ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்கும் பல வீரர்களும் மன்னர்களும் வந்துள்ளனர். குறிப்பாக கஜினி முகமது, கோரி முகமது, அடிமை வம்சத்தினர் ஆகியோர் நம் நாட்டின் மீது படை எடுத்து வந்தனர். அவர்களது குறிக்கோள் இந்தியாவில் இறைவனது ஒரிறைக் கொள்கையை நிலை நிறுத்துவதோ அல்லது அதற்கான பிரச்சாரங்களைச் செய்வதோ அல்ல. மாறாக நமது நாட்டின் செல்வ வளமையைச் சுட்டுகின்ற பொன்னும் மணியும் நிறைந்த கோயில் திரு ஆபரணங்களைக் கைப்பற்றுவதே ஆகும். இத்தகைய கொள்ளைக்காரர்களுக்கு மாற்றாக அரபு நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு இரண்டு உத்தமர்கள் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் வருகை தந்தனர். அவர்களின் நோக்கமும் செயலும் இறைமறையான - இறைவனது வேத வெளிப்பாடாகிய திருகுர் ஆன் வலியுறுத்துகின்ற ஏக இறைக் கொள்கையையும் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்து காட்டிய சுன்னத் என்ற வாழ்க்கை நடைமுறைகளையும் அனைத்து மக்களிடமும் தெரிவிக்க வேண்டும், அவைகளின் வழியில் அனைவரும் இறைவனது கருணைக்கு இலக்காகி நற்பேறு பெற வேண்டும் என்பதுமாகும். இவர்களில் முதலாமவர் பாபா நத்ஹர் (வலி) இவர் சிரியா நாட்டு மன்னராவார் - இவர் ஆன்மீக உந்துதலால் ஆட்சியைத் துறந்து கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு வந்து சமயப்பணி மேற் கொண்டார். திருச்சிராப்பள்ளியில் தமது வாழ்நாள் முழுவதும் இஸ்லாமிய சமயப் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஆவார். இவரது அடக்கஸ்தலம் அங்கேயே உள்ளது. இரண்டாமவரான சுல்த்தான் செய்யது இபுராஹிம் (வலி) அவர்கள் தமது தொண்டர்களுடன் சமயப்பணிக்காக கி.பி. 1187 இல் பாண்டிய நாட்டின் காயல் கடற்கரையை அடைந்தார். அதுவரை