பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 93 தமிழ்நாட்டிலும் சரி வேறு நாடுகளிலும் சரி இஸ்லாமிய கொள்கைகளைப் பரப்பும் பணியில் ஈடுபட்டவர்கள் எவரும் எய்தப் பெறாத இன்னல்களையும். இடர்ப்பாடுகளையும் அனுபவித்தார். பாண்டியர் நாட்டில் அமைதி மார்க்கம் எனப் புகழப்படும் இஸ்லாத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதற்குக் கூட மதுரைப் பாண்டியன் பெருந்தடை விதித்தான். இறைவனது வேதத்தைப் பிரசித்தம் செய்வதற்கு இப்படியொரு தடையா எனச் சில நாட்கள் கவலையுற்ற சுல்த்தான் அவர்கள் தடையை மீறுவது என முடிவு செய்தார். எவ்விதப் போருக்கும் ஆயத்தமில்லாத நிலையில் சமயப் பிரச்சாரத்திற்கென சுல்தானுடன் வந்த தொண்டர்கள், பாண்டியனது எதிர்ப்பை மீறித் தகர்த்தெறிந்து மதுரையில் தீன் கொடி நாட்டினர். அடுத்துப் பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதிக்குச் சென்ற பொழுது அங்கும் சுல்த்தான் அவர்கள் ஓர் இறைக் கொள்கையை எடுத்துச் சொல்வதற்கு ஒரு பெரும் போரையே சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பெளத்திர மாணிக்கப் பட்டினம் (பெரிய பட்டிணம்) என்ற பெருநகரில் அமர்ந்து ஆட்சி செய்த பாண்டியனுடன் பத்து நாட்கள் போரிட்டு அவனைக் கொன்றார். அவனது ஆட்சி முடிந்து விட்டதால் மதுரையிலிருந்து பெளத்திர மாணிக்கப் பட்டினம் வரையான பகுதியில் சுல்த்தான் அவர்களது தொண்டர்கள் சமயப் பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். பெளத்திர மாணிக்கப் பட்டினத்தில் சுல்த்தான் அவர்கள் நிலை நிறுத்திய வடிரி அத் ஆட்சியினால் வடக்கே சோழ மண்டல எல்லை யிலிருந்து தெற்கே திருநெல்வேலி சீமை வரையான பரந்த பகுதியில் வாழ்ந்த மக்களில் கணிசமான எண்ணிக்கையினர் இஸ்லாத்தைத் தழுவினர். பரவலாக ஆங்காங்கு பள்ளி வாயில்கள் அமைக்கப்பட்ட தால்ப் புதிய சமயத்தைச் சேர்ந்த மக்கள் இறைவனுக்கு நாள்தோறும் கையேந்தி நன்றியைத் தெரிவித்தனர். எங்கும் தீன் முழக்கம் எதிரொலித்தது. தமது இலட்சியம்