பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நபிகள் நாயகம் வழியில் நிறைவேறியதால் சுல்த்தான் செய்யது இபுராஹிம் அவர்கள் மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைந்தார்கள். தென்னகத்தின் சமுதாய வாழ்வில் ஒரு புதிய ஆன்மீக உணர்வினை, இயக்கத்தை ஏற்படுத்தி நபிகள் நாயகம் வழியில் நின்று இந்த மண்ணிற்கே உரிய மகத்தான பண்புகளான நேச மனப்பான்மை, நல்லிணக்கம், சமயப் பொறை, சகோதரத்துவம், ஓரிறைக் கொள்கை ஆகியவைகளை வளர்த்துச் செழுமைப்படுத் திய சுல்த்தான் செய்யிது இபுராஹிம் அவர்களது அரிய தொண்டினையாரும் எளிதில் மறக்க முடியாது. இதன் காரணமாக இறை நேசர் செய்யது இபுராஹிம் அவர்கள் வீரப்போர் புரிந்து இறைவனுக்கு உகந்த தியாகியான அவர்களது இறுதி போராட்டக் களமாகியது இன்றைய ஏர்வாடி தர்ஹா. செரீபில் நாட்டின் பல பகுதியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்கள் ஆண்டு தோறும் சாதி, குல சமயமொழிப் பாகுபாடுகளை மறந்தவர்களாக ஒவ்வொரு ஆண்டும் சுல்தான் அவர்கள் மறைந்த நாளான, துல்கயிதா பிறை 23 அன்று இரவில் கூடி நின்று இந்த இறைநேசருக்கு நன்மாராயம் கூறி வருகின்றனர். இறைவனது அனுபூதி பெற்ற இந்த நல்லடியாரது ஆன்மீக ஒளி இந்த மக்களுக்குப் பல்லாண்டு காலம் நல்வழி காட்டியாக அமைந்து உதவி வருகிறது. தொடர்ந்து இந்த மக்கள் இறை நம்பிக்கையுடனும் சுல்தான் அவர்களைப் போன்ற பெருமக்களது தியாகத்தையும் சமுதாயப் பணியையும் நினைவூட்டி தமிழ்ச் சமுதாயத்தின் பாரம்பரியப் பெருமைக்கு வழிகோலும் நன்மக்களாக அமைந்து விளங்குவர் என்பது உறுதி. ஆதலால், புனித சுல்த்தான் அவர்களை தமிழகத்தில் முஸ்லீம் சமயத்தை பரப்பும் பணியில் ஈடுபட்ட முன்னோடிகளில் முதல்வர் என கொள்ளுதல் பொருத்தமாகும்.