பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் Ց5 மேலும், அதுவரை, வெற்றிக் கொடி நாட்டிய, வீராதி விரர்களையும், பலசிறு நாடுகளை, இணைத்து, பேரரசாக மாற்றிய, பேரரசர்களைப் பற்றியுமே உலக வரலாற்றில் பதிவு செய்துள்ளன. ஆனால் சுல்த்தான் செய்யது இபுறாகிம் ஷகிது அவர்களைப் போன்ற சமயச் சான்றோர்களை, ஏக இறைக் கொள்கையை, நிலை நாட்ட தங்கள் இன்னுயிரையை ஈந்தவர்களை, வரலாறும் , மக்களும் அறிந்திருக்க வில்லை. சிறந்த குணங்களுக்கும், மனித பண்புகளுக்கும், முன்னோடி யாக விளங்கிய முகமது நபி ஸல்லல்லாகு அவர்களது வழியில் இன்று பல மாநிலங்களுக்கும் சென்று ஏக இறைக் கொள்கையை பரப்பும் பணியில் தியாகியானவர்கள், யாரும் இல்லை. இந்த அறிய குண நலன்களை உடைய, கோமான் சுல்தான் செய்யது இபுறாகிம். அவர்களை பாண்டிய நாட்டு மக்கள் பல நூற்றாண்டுகள் கடந்த பொழுதிலும் இறைவனுக்கு அடுத்த படியாக, சுல்தான் அவர்களை தங்களது இதயத்தில் நிறுத்தி வைத்து, போற்றி வருகின்றனர். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள், தீராத வியாதியினால் துன்பப்படுகிறவர்கள் ஆகிய பல தரப்பு மக்களும் தங்களது நம்பிக்கை வழியாக சுல்த்தான் அவர்களைப் போற்றி வருகின்றனர். சமய, இன மொழி, வேறுபாடு இல்லாத நிலையில் தங்கள் குறைபாடுகளை, சுல்த்தான் அவர்களது சன்னிதானத்தில் தெரிவித்து அதற்கான தீர்வுகளை இறைவனிடமிருந்து பெற்று அருளுமாறு அவர்கள் நாள்தோறும் நெக்குருகிக் கெஞ்சுவது காண்டோரது மனதை கலங்கச் செய்யும், காட்சியாக அமைந்துள்ளது. தொலை தூரத்தில் உள்ள கேரளக் கதையின் வட கோடியில் உள்ள தாழிப்பரம்பாவிலிருந்து தெற்கே இலங்கையின் காலி நகர் வரையான பகுதியிலிருந்து மக்கள் கூட்டம் ஏர்வாடி சைகிது அவர்களின் சன்னிதானத்திற்கு நாள் தோறும். வருகை தருவது, நம்மை சிந்திக்க வைக்கின்றது.