பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


படிப்போர்க்குப் பொருள்மயக்கம் ஏற்படாதிருப்பதற்காகச் சிலசில இடங்களில் சீர்பிரித்துப் பதிப்பித்துள்ளோம். பாடல் முதற்குறிப்பு அகரவரிசையும் அரபுச் சொற்கள் சிலவற்றுக்குப் பொருள் விளக்கப்பட்டியலும் பாவலர் வாழ்க்கைக்குறிப்பும் நூலின் இறுதியில் இணைத்துள்ளோம்.

ஜனாப் கே.சி.எம். அவர்கள் பாவலரின் உள்ளத்தில் நிலையான ஓர் உயரிய இடம்பெற்றவர். இதனை செய்குதம்பிப் பாவலர் அவர்களை கையொப்பமிட்டு 15.4.1945-ல் கம்பம் பீர்முகமதுப் பாவலர் அவர்கள் ஓர் உயரிய சமூகத்துக்கு எழுதிய கடிதம் தெளிவாக்குகிறது. '..... தங்கள் : மாணவர் ஆலிஜனாப் முகமது இசுமாயில் ராவுத்தர் அவர்கள்மீது அகப்பொருள் ஐந்திணக்கோவை யொன்றெழுதத் தீர்மானித்து அதில் சில பாக்களைத் தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்... . . . . அந்நூலை ஏற்றருளத் தங்கள் மாணவரைத் தூண்டு வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.இக்கோவை வரன்முறையாக எழுதப்படுகிறது என்று பேசும் கடிதத்தையும் அத்தோடு இணைத்தனுப்பப்பட்ட 'உத்தமபாளையம் முகமதுஇஸ்மாயில் கோவை'யின் சில செய்யுட்களையும் கவனிக்கின்ற போது ஜனாப் கே.சி.எம். அவர்கள் பாவலரின் நன்மதிப்பினைப் பெற்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது. இப்படிப் பாவலர் அவர்களோடு இறுக்கமான இலக்கியத்தொடர்புகொண்டிருந்த கே.சி.எம் அவர்கள் இந்நூல் வெளியீட்டோடு தன்னை இணைத்துக் கொண்டமைக்கோ, பாவலர் அவர்களின் இலக்கியவாரிசாக விளங்கும் 'கவிக்கோ ஜனாப். அப்துல்ரகுமான் அவர்கள்

xxi