இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
62 வாளெடுத்தான் வெட்டுதற்கே வன்நெஞ்சன் ஒருவன் வழுக்கியந்த வாள்வீழ்ந்த ததையெடுத்தே அன்னோன் நீள்கரத்தி லேகொடுத்து வக் இறைவனுனைக் காக்க நெடிதுநாள் நன்னெறியில் வாழ்கவெனக் கூறி ஆளனெனும் படைத்திட்ட ஆண்டவனை யின்றி அவனியிலே ஓரணுவும் அசையாதெனும் உண்மை ஆழமதாய் மக்கள்மனம் தனில்பதிய வைத்த அருளரசே முஹம்மதரே வாழியரோ வாழி.