இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
68 தன்னருகில் தன்மனைவி தனையமரச் செய்து தன்னைப்போல் அவளுண்ணச் செய்திடுக கணவன் மன்னும்உடை தனக்கெடுத்தால் அவளுக்கும் எடுக்க மற்றுமவள் இடத்திலென்றும் அன்பாய்ப்பழ கிடுக தன்மனைவி தனக்கடிமை என்றெண்ணா திருக்க தானவளை அடிப்பதனை. the நிச்சயம்த விர்க்க என்றெடுத்து நன்குரைத்த ஏற்றம்மிகு நபியே எழிலார்ந்த முஹம்மதரே வாழியரோ வாழி.