________________
சைவ சமய அறவுரையாளர் திருவாவடுதுறை ஆதீன வித்வான் உயர்திரு. புலவர் கீரன் அவர்களின் அணிந்துரை நபிகள் நாயகம் எல்லா மதத்தவரும் பின்பற்றக் கூடிய நீதிகளை உபதேசித்த அருளாளர்: நாயகத்தின் போதனையால் செழித்தது, இஸ்லாம் மதம் மட்டுமன்று ஏனைய மதங்களும் ஆகும். இதனைப் பிறமதங்களின் அறவுரைகளை ஊடுருவி நோக்கினால் தெரிந்து கொள் ளலாம். நபிகள் நாயகத்தின் வரலாற்றைக் காவியரூப மாகத் தமிழ் மொழியில் கற்பதற்கு அமைந்த நூல், உமறுப் புலவரின் சீறாப்புராணம். வில் அரும் நூல், கவி லகா மு ஷெர்ப் அவர்கள் இயற்றி யுள்ள "நபியே! எங்கள் நாயகமே!" என்ற கவிதை நூல். அவர்தம் அறவுரைகளைத் தெளிந்த கவிதை வடி - இந்நூல் தெய்வமணம் கமழுகிறது. அரசியலிலும், சமுதாய சீர்திருத்தத்திலும் ஈடுபட்ட ஆசிரியர் பல் வேறு நூல்களை' இதுவரை வெளியிட்டிருந்தாலும், இந்த நூலிலேயே அவரது கவித்துவத்தின் தெய்வீகத் தன்மையைக் காண்கிறேன். அவருடைய நூல்களையும் எழுத்தெண்ணிப் படித்தவன் என்ற உரிமையிலேயே இதனை நான் எழுதுகிறேன். எல்லா ஒரு கவிஞன், தன் உள்ளத்திலே அரும்பும் கருத்துக்களைக் கவிதை வடிவில் வெளியிடுவது எளிது. ஆனால், ஒரு பெரும் அருளாளரின் கருத்துக்களை அதன் தன்மை கெடாமலும், கவியுரு சிதையாம லும் கவிதை உருவில் வெளியிடுவது அரிதினும் அரிது. இம் முயற்சியில் துணிகரமாக ஈடுபட்டு மகத்தான வெற்றிபெற்று நிற்கிறார் கவி கா. மு. ஷெரீப். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறவுரைகளைப் பின்பற்ற நினைப்போருக்