________________
24 இசுலாத்திலேயே மிகச் சிறந்த ஒன்று மனிதர்களிலே உயர்வு தாழ்வு இல்லை என்பதாம்! விஞ்ஞானம் வெகு முன்னேற்றமடைந்துள்ள இந்த நாளிலேயே செய்ய முடியாததை, அறம் பாழ்த்துக் கிடந்த அந்த நாளில் முகம்மது நபி அவர்களால் செய்ய முடிந்தது நினைத்தாலே வியப்பளிப்பதாகும்! எந்திரத்தால் சந்திரனைத் தொட்டுவிட்ட இன்றும் இழிவாக நீக்ரோவை எண்ணுகிறான் மனிதன்; மந்திரத்தால் மாயவித்தை செய்குவது போன்று மனிதரிலே தாழ்வுயர்வே இல்லையெனச் செய்தீர்! சிந்தித்தால் இதுநடந்த காலத்தை வியப்பால் சிரம்சுற்றச் செய்திடுதே ஆண்டவனின் தூதே! எனக் கவிஞர் கூறுவது உண்மை தானே! என்பது நபிகள் நாயகத்தினுடைய முழு வாழ்வையும் ஒரே பாடலில் அடக்கிக் காட்டுவது நயம் நிறைந்ததாயுள்ளது. பிறக்கும்முன் தந்தையரைத் தானிழந்து, புவியில் பிறந்தசில ஆண்டிற்குள் தாயாரை இழந்து சிறப்பான கல்வியின்றி மாடாடு மேய்த்துச் சுற்றத்தார் ஆதரவில் அனாதையென வளர்ந்து முறைப்படிக்குத் தொழில்செய்து திருமணமும் முடித்து