இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
25 மும்மூன்று மகவு பெற்று ஞானவழி சென்று பெறற்கரிய நபிப்பட்டம் பெற்றிட்ட இறுதிப் பெரு நபியே!...... இவரே நபி என்பதை இவ்வொரு பாடலிலேயே உணர்த்தி விடும் கவிஞரின் திறம் போற்றுதற்குரியது. இந்நூல் இசுலாத்தின் பிழிவை இனிய தமிழில் தருகிறது. எளிய சொற்கள், தங்குதடையற்ற நடை யோட்டம், தெளிந்த சிந்தனை, அரிய செய்தி விளக்கம் ஆகியவற்றின் தொகுப்பாய் இந்நூல் இலங்குகிறது. இதுதான் இசுலாம்' எனப் புரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும். கவிஞரின் கனிந்த பட்டறிவையும், இசுலாமிய நெறிகளில் அவர் ஊறித் திளைத்துள்ளதையும் இந்நூல் நன்கு புலப்படுத்துகின்றது. "நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து படித்தற்குரியதும் நெஞ்சில் பதித்தற்குரியதுமான இச்செந்நூலை ஆக்கித் தந்துள்ள கவிஞர் பெருமானை வாழ்த்துவோம்! போற்றுவோம்! அன்பன், சு.செல்லப்பன்