உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்ந்துரை (மௌலவி M. அப்துல் வஹ்ஹாப் M.A.,B.TH.) பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் நஹ்மதுஹு வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம் அனைத்துலகங்களுக்கும் அருட்கொடையாய், மனித வாழ்க்கையின் இலட்சிய நாயகராய், மக்கள் குலம் என்றென்றும் பின்பற்றி நடக்கவல்ல நல்வழி காட்டியாய், பகைவரையும் அன்புக்கரம் நீட்டி ஆதரித்த வள்ளல் பெருமானாராய், பெண் ணினத்தின் இடர் தீர்க்க வந்த பெருமைக்குரிய தோழராய்-உலக வாழ்க்கையின் ஒவ்வொரு துறைக்கும் ஓரழகிய முன் மாதிரியாய்-ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு · முன்னர் இவ்வுலகில் தோன்றிய உத்தமத் திருநபி எம்பெருமானார் முஹம்மது ரஸூல் (ஸல்) அவர்களைப் பற்றிப் பல்லாயிரக்கனக்காண எழுத்தோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. - காவியமாய், காப்பியமாய், சந்தப் பாக்களாய், உரை நடை நூற்களாய் இன்னமுள்ள இலக்கிய வடிவங்களாய் இறுதித் தூதரின் எழிலார் திரு வாழ்வு வரையப்பட்டுக் கொண்டே வருகின்றது. எழுத்தில் இலங்குவது - இயங்குவது மட்டு மல்லாமல், மக்கள் நெஞ்சிலும் நினைவிலும் நீங்கா இடம் பெற்றுள்ள தலைவர் எம்பெருமானார் ரஸூல் (ஸல்) அவர்கள்தாம். தொழுகையிலும், இதர வணக்கங்களிலும் ஒவ்வொரு நாளும்- உலகத்தின் ஒவ்வொரு கோணத்திலும் கோடிக்கணக்காண மக்கள் அவர்கள் திருப்பெயரை நினைவு கூர்ந்து கொண்டே இருக்கின்றனர். முஹம்மது, அஹ்மது, மஹ்மூது, ஹாமிது, தாஹா, யாஸீன் போன்ற அவர்களின் பல்வேறு பெயர்களைத் தம் குழந்தைகட்கு இட்டு, அன்னாரின் நினைவை என்றென்றும் பசுமையாக்கி வருகின்றனர். இதில் வியப்பில்லைதான். ஏனென்றால், அல்லா ஹுதஆலாவே தன் தூய திருமறையில்,