உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

"ரபஃனாலகதிக்ரக”- (முஹம்மதே) உம் புகழை. நாமே உயர்த்துவோம் - என்று உறுதியளித்த பின், அவனுடைய நல்லடியார்கள் அப்பெருமானாரின் திருப்பெயரை -நிறை புகழை சங்கைப் படுத்து வதில் வியப்பென்ன இருக்கிறது? 'முஹம்மது என்றாலே 'புகழுடையவர்' என்று தான் பொருள். அந்தப் புகழ் பதினான்கு நூற்றாண்டுகளாக மங்காமல் மறையாமல், வாடாமல், வளங்குன்றாமல் இருக்கும் இரகசியம் என்ன? அதைத்தான் பெருங்கவிஞர்களும், உரை நூல் வல்லுனர்களும், சொல்லேருழவர்களும் தத்தம் ஆற்றலுக்கும், ஈடு பாட்டுக்கும் தக்கவாறு. எழுதியும், எடுத்துரைத்தும் வருகின்றனர். இத்தகு புகழ் மணக்கும் இலக்கியப் பணியின் தொடரில், சிறப்புமிக்க ஒரு கவிதைப் படைப்பாக விளங்குகிறது சகோதரர் கவி கா மு ஷரீப் அவர் களின் “ நபியே ! எங்கள் நாயகமே! என்னும் அரிய நூல். பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்றில் ஆசிரியருக்குள்ள ஈடுபாடு ஒவ்வொரு பாட்டிலும் நெஞ்சைத் தொடும்வண்ணம் புலப்படுகிறது. முஹம்மதுர் ரஸூல் (ஸல்) அவர்களின் ஆத்மீகப் பாரம்பரியத்தை அழகுபட எடுத்துரைக்கும் கவிஞர், 'எழிலார்ந்த ரமலானில் ஹிராமலை சென்று வாகுடனே தனித் தியானம்' செய்துவந்த. பெருமானாரின் பாட்டனார் அப்துல் முத்தலிபையும் பொருத்தமாகக் குறிப்பிடுகிறார்கள். அவர் பெருமானாரைப் போற்றும்போது, களுடைய சுற்றமும் நட்பும் போற்ற வாழ்த்துவது இஸ்லாமிய இலக்கிய மரபு.அதையொட்டி, கவிஞர் யாத்துள்ள அனைத்துப் பாடல்களும் அப் பெருமக்களின் சிறப்பினைச் சுருங்கக் கூறி விளங்க வைக்கின்றன. பாடல்கள் முழுவதும் வெறும் சொல்லடுக்கு களாகவோ, அலங்காரமாகவோ இல்லாமல்; பெருமானாரின் வாழ்க்கை நெறிகளை ஐயந்திரிபறப் புலப்படுத்தும் வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடு வனவாக அமைந்துள்ளன. இவ்வரலாற்று நிகழ்ச்சி